Home சைவம் எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பூசணிக்காய் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு...

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பூசணிக்காய் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

நான் பெரும்பாலும் ஹோட்டல்களில் சிக்கன் மஞ்சூரியன் கோபி மஞ்சூரியன் மீன் மேக்கர் மஞ்சூரியன் என விதவிதமான மஞ்சூரியன் வாங்கி சாப்பிட்டு இருப்போம். என் வீடுகளில் கூட இதை நாம் செய்து சாப்பிட்டு இருப்போம். பொதுவாக நாம் எந்த ஒரு உணவுகளையும் பொறித்து மொறு மொறுவென சாப்பிட்டால் நமக்கு மிக மிகப் பிடிக்கும் ஆனால் அந்த பொரித்த உணவுகளை சிறிது வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து காரன் மற்றும் புளிப்புடன் சாப்பிடும் பொழுது சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

அதைத்தான் நாம் மஞ்சூரியன் என்று சொல்கிறோம். இந்த மஞ்சூரியன் வகைகளை நாம் எல்லா வகையான சாதத்திற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். ஒரு எளிமையான சாப்பாடாக இருந்தால் கூட இந்த மஞ்சூரியனை வைத்து சாப்பிடும் பொழுது சுவையும் அட்டகாசமாக இருக்கும் அதே நேரத்தில் எளிமையான ஒரு உணவு மிகப்பெரிய உணவாக மாறிவிடும்.

நாம் என்னதான் பலவகையான மஞ்சூரியர்களை செய்து சாப்பிட்டு இருந்தாலும் இன்று நாம் பூசணிக்காய் மஞ்சூரியன் செய்யப் போகிறோம். பூசணிக்காய் மஞ்சூரியன் அது எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாம் ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அருமையாக இருக்கும்.

பொதுவாக பூசணிக்காயை நாம் சாம்பாரில் போட்டு சமைத்து கொடுத்தால் யாருமே விரும்பி சாப்பிட மாட்டார்கள் ஆனால் அது ஏன் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் அது உன் பிடித்தமான வகையில் செய்து கொடுத்தால் பிடிக்காத பூசணிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அருமையான பூசணிக்காய் மஞ்சூரியனை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். வாங்க அந்த பூசணிக்காய் மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பூசணிக்காய் மஞ்சூரியன் | Pumpkin Manchurian Recipe In Tamil

பெரும்பாலும் ஹோட்டல்களில் சிக்கன் மஞ்சூரியன் கோபி மஞ்சூரியன் மீன் மேக்கர் மஞ்சூரியன் என விதவிதமான மஞ்சூரியன் வாங்கி சாப்பிட்டு இருப்போம்.என் வீடுகளில் கூட இதை நாம் செய்து சாப்பிட்டு இருப்போம். பொதுவாக நாம் எந்த ஒரு உணவுகளையும் பொறித்து மொறு மொறுவென சாப்பிட்டால் நமக்கு மிக மிகப் பிடிக்கும் ஆனால் அந்த பொரித்த உணவுகளை சிறிது வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து காரன் மற்றும் புளிப்புடன் சாப்பிடும் பொழுது சுவை இன்னும் அருமையாக இருக்கும். வாங்க அந்த பூசணிக்காய் மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH, starters
Cuisine: Chinese
Keyword: Pumpkin Manchurian
Yield: 4
Calories: 85kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ மஞ்சள் பூசணிக்காய்
  • 1 கப் நறுக்கிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 கப் மைதா
  • 1/2 டீஸ்பூன் சோள மாவு
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 கப் சர்க்கரை
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 கப் தக்காளி சாஸ்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1/4 கப் வெங்காயத்தாள்

செய்முறை

  • முதலில் பூசணிக்காயை நன்கு துருவி அதில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  
    பின்பு அதில் அரை கப் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள்,மைதா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பிசைந்த கலவையை உங்களுக்கு தேவையான அளவில் உருட்டிஎடுத்துக் கொள்ள வேண்டும்
  • இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது காய்ந்த மிளகாய் 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து அதனை விழுதாக மிக்ஸியில் போட்டுஅரைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் அரை கப், இஞ்சி பூண்டு விழுது காய்ந்த மிளகாய் பொழுது அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
  • இப்பொழுது மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதையும் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவிற்கு உப்பு எடுத்து வைத்துள்ள சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • பின்பு பொருத்துவைத்துள்ள உருண்டைகளை சேர்த்து கலந்து வெங்காயத்தாளை தூவி இறக்கினால் சுவையான பூசணிக்காய் மஞ்சூரியன் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 85kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : முட்டை பிரியர்கள் ஏற்ற பக்காவான ரெசிபி! மசாலா முட்டை பொரியல் சட்டென இப்படி செய்து சுவைத்துப் பாருங்க!

-விளம்பரம்-