முட்டை பிரியர்கள் ஏற்ற பக்காவான ரெசிபி! மசாலா முட்டை பொரியல் சட்டென இப்படி செய்து சுவைத்துப் பாருங்க!

- Advertisement -

ஒரு சிலருக்கு திடீரென வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதற்காக வீட்டில் எப்பொழுதும் முட்டை இருந்தால் உடனே அதில் ஒரு ஆம்லெட் அல்லது முட்டை பொரியல் செய்து சாப்பிடுவார்கள்.. முட்டை பொரியல் ஒரே மாதிரியான சுவையில் செய்யாமல் இந்த முறையில் மசாலா முட்டை பொரியல் செய்து பாருங்கள்  இதன் சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும்.

-விளம்பரம்-

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். அனால் ஒரேமாதிரி செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். சிறிது மாற்றம் செய்து சமைத்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். குழந்தைகளை விருப்பமாக சாப்பிட வைப்பது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உணவுகளை கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களே முன்வந்து உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி குழந்தைகள் விருப்பமாக சாப்பிடக்கூடிய மசாலா முட்டை பொரியல் எவ்வாறு செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -
Print
3 from 2 votes

மசாலா முட்டை பொரியல் | Masala Egg Poriyal In Tamil

குழந்தைகளுக்கும் முட்டை என்றால் மிகவும் பிடிக்கும்.அனால் ஒரேமாதிரி செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். சிறிது மாற்றம் செய்து சமைத்துகொடுத்தால் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். குழந்தைகளை விருப்பமாக சாப்பிட வைப்பதுஅவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உணவுகளை கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுக்கவேண்டும். அப்போது தான் அவர்களே முன்வந்து உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிகுழந்தைகள் விருப்பமாக சாப்பிடக்கூடிய மசாலா முட்டை பொரியல் எவ்வாறு செய்வது என்பதைபற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Masala Egg Poriyal
Yield: 4
Calories: 120kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 முட்டை
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • மல்லித்தழை சிறிது
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 4 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 10 சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை சிறிது

செய்முறை

  • முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.வெங்காயம்,மிளகாய் இரண்டையும் நீள வாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன்பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பாதி வதங்கியதும்தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் மிளகாய்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்,
  • பிறகு கலக்கி வைத்துள்ள முட்டைகளை ஊற்றி வேகும் வரை நன்கு கிளறவும். இறுதியில் மல்லித்தழை சேர்த்து நன்றக கிளறி அடுப்பை அணைத்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  • சுவையான முட்டை பொரியல்

Nutrition

Serving: 100g | Calories: 120kcal | Protein: 40g | Saturated Fat: 13.6g | Cholesterol: 6.9mg | Sodium: 376mg | Potassium: 859mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் எக் வெஜிடபிள் ரைஸ் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசிக்கு எவ்வளவு கொடுத்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!