புஸ்சு புஸ்சுனு பஞ்சாபி வெந்தயக்கீரை பூரி ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!

- Advertisement -

ரொம்பவே சுவையான டேஸ்டான உணவுகள் பஞ்சாபி உணவுகள் அப்படின்னு சொல்லலாம்.  பஞ்சாபி உணவுகள்ல அதிகமா கோதுமையை சேர்த்து செய்யப்படும். அப்படியே இவுங்க நிறைய கோதுமையை உணவில் சேர்த்துக்கிறதுனால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவாக இருக்கிறது. அப்படி பஞ்சாபி ஸ்டைலில் ரொம்பவே ருசியான ஒரு பூரி எப்படி பண்றதுன்னு பாக்க போறோம்.

-விளம்பரம்-

அந்த பூரிய நம்ம வெந்தயக் கீரையை பயன்படுத்தி செய்ய போறோம். பஞ்சாபி பூரியில் ரொம்பவே டேஸ்ட்டான பூரி வெந்தயக்கீரை பூரி தான். இந்த வெந்தயக்கீரை நம்ம எப்படி பயன்படுத்தி கூட்டு இல்ல சாம்பார் வச்சிருப்போம். அவங்க வெந்தயக்கீரையில் பூரி செஞ்சு சாப்பிடுறாங்க. அந்த வெந்தையக்கீரையை பயன்படுத்தி ரொம்பவே ருசியான பூரி எப்படி செய்யலாம். கீரையை உணவில் சேர்த்துக்காத குழந்தைகள் இருக்கலாம் இந்த மாதிரி வித்தியாசமா அவங்களுக்கு சப்பாத்தி, பூரி, சாதத்தில் எப்படி கலந்து கொடுக்கணும் அப்படிங்கறத தான் முக்கியமான விஷயமே.

- Advertisement -

இந்த வெந்தயக்கீரை உடலுக்கு ரொம்பவே நல்லது இந்த கீரைல இருக்கிற இரும்புச்சத்து  உடலுக்கு அதிக அளவு நன்மையை கொடுக்கிறது. இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. இந்த வெந்தயக் கீரையை பூரில கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு பூரி இல்ல கீரை கலந்து கொடுத்து இருக்கோம் அப்படிங்கற ஒரு பீலே வராது. நல்ல பொடியா நறுக்கிட்டு அதை மாவில் கலந்து பூரி சுட்டா ரொம்பவே சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய உணவுகள் ரொம்பவே சத்தமாக ஆரோக்கியமிக்க உணவுகளாகவும் அதேசமயம் நஜ புடிச்ச மாதிரி கொடுக்கணும். இதுதான் குழந்தைகளை சாப்பிட வைக்கிறதுல இருக்குற பெரிய பிரச்சனையே நம்ம சத்துன்னு சொல்லி எதெல்லாம் கொடுக்குறோமோ அது எல்லாமே அவங்க சாப்பிட மாட்டாங்க. அதனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி நம்ம சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளோடு சேர்த்து செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க இந்த பஞ்சாபி வெந்தயக்கீரை பூரி எப்படி செய்யலாம் என்று தெரிஞ்சுக்கலாம்.

Print
5 from 1 vote

பஞ்சாபி வெந்தயக்கீரை பூரி | Punjabi Methi Poori In Tamil

பூரியநம்ம வெந்தயக் கீரையை பயன்படுத்தி செய்ய போறோம். பஞ்சாபி பூரியில் ரொம்பவே டேஸ்ட்டான பூரி வெந்தயக்கீரை பூரி தான். இந்த வெந்தயக்கீரை நம்ம எப்படி பயன்படுத்தி கூட்டு இல்ல சாம்பார் வச்சிருப்போம். அவங்க வெந்தயக்கீரையில் பூரி செஞ்சு சாப்பிடுறாங்க. அந்த வெந்தையக்கீரையை பயன்படுத்தி ரொம்பவே ருசியான பூரி எப்படி செய்யலாம். கீரையை உணவில் சேர்த்துக்காத குழந்தைகள் இருக்கலாம் இந்த மாதிரி வித்தியாசமா அவங்களுக்கு சப்பாத்தி, பூரி, சாதத்தில் எப்படி கலந்து கொடுக்கணும் அப்படிங்கறத தான் முக்கியமான விஷயமே. சரி வாங்க இந்த பஞ்சாபி வெந்தயக்கீரை பூரி எப்படி செய்யலாம் என்று தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: punjabi
Keyword: Punjabi Methi Poori
Yield: 4
Calories: 230kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கோதுமை மாவு
  • 2 ஸ்பூன் ரவை
  • 14 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • 12 ஸ்பூன் சீரகம்
  • 12 ஸ்பூன் ஓமம்
  • 1 கப் வெந்தயக்கீரை
  • 1 ஸ்பூன் கடலை மாவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகுஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதனோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  •  பிறகு அதில் சீரகம், ஓமம் , பெருங்காய தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெந்தயக்கீரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  •  பின் கடலை மாவு மற்றும் ஊற வைத்து எடுத்துள்ளரவை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பிறகு மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.மாவை சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும் கீரை இருப்பதால் இலகிவிடும்.
  •  பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிகளாக தேய்த்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் பூரிகளை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
  • இரண்டு புறமும் விந்து உப்பி வந்து பூரிகளை எடுத்து சூடாக பன்னீர் மசாலா அல்லது உருளைக்கிழங்கு மசாலாவோடு பரிமாறினால் சுவையான பஞ்சாபி வெந்தயக்கீரை பூரி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 16g | Sodium: 37mg | Potassium: 150mg