ருசியான காடை மஞ்சூரியனை ஈஸியாக இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

காடை மஞ்சூரியன் என்றால் என்னன்னு தெரியாதவர்களும் நம்மை சுற்றி இருக்க தான் செய்கிறார்கள். முதல் முறையாக சாப்பிடும் பொழுது காடை இல்ல என்று ஆச்சரிய படுவோர்களும். பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் இந்த உணவு வகையை மிக சுலபமாக வீட்டிலேயே மொறு மொறுவென்று செய்திடலாம்.

-விளம்பரம்-

காடை கொண்டு செய்யப்படும் இந்த காடை மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். மஞ்சூரியன் என்றாலே நமக்கு சிக்கன் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்த காடை மஞ்சுரியன் செய்வதற்கு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. அதிகம் செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்தமான இந்த மஞ்சூரியன் இப்படியும் காடை சேர்த்து செய்து கொடுத்துப் பாருங்கள்.

- Advertisement -

இப்போதெல்லாம் குழந்தைகள் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் என சீன உணவுகளின் மீது அதிகமான ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த உணவுகளை கடையில் வாங்கி கொடுப்பது ஒன்றும் அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இதை முடிந்த அளவிற்கு நாம் வீட்டிலே செய்து கொடுக்கும் போது அவர்களுக்கு நன்றாகவே செய்து கொடுக்கலாம். அந்த வகையில் காடைமஞ்சூரியனை வீட்டில் எப்படி சுலபமாகவும் அதே நேரத்தில் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்து கொடுப்பது என்பதை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Print
No ratings yet

காடை மஞ்சூரியன் | Quail Manchurian Recipe In Tamil

குழந்தைகள் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் என சீன உணவுகளின் மீது அதிகமான ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தஉணவுகளை கடையில் வாங்கி கொடுப்பது ஒன்றும் அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இதைமுடிந்த அளவிற்கு நாம் வீட்டிலே செய்து கொடுக்கும் போது அவர்களுக்கு நன்றாகவே செய்துகொடுக்கலாம். அந்த வகையில் காடை மஞ்சூரியனை வீட்டில் எப்படி சுலபமாகவும் அதே நேரத்தில்ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்து கொடுப்பது என்பதை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில்தெரிந்து கொள்ளப் போகிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: starters
Cuisine: Chinese
Keyword: Quail Manchurian
Yield: 4
Calories: 489kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 காடை
  • 1 வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 துண்டு பூண்டு
  • 50 கிராம் மைதா
  • 50 கிராம் சோள மாவு
  • உப்பு தேவைக்கு

செய்முறை

  • முதலில் காடையை கழுவிக்கொள்ளவும். மைதா, சோள வைத்துக்கொள்ளவும்.
     
  • நன்றாக பின்பு மாவு சேர்த்து அதனுடன் நல்லா கெட்டியாக தண்ணீர் ஊற்றி கலக்கி எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். பின்பு அதனுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம், குடைமிளகாய்,உப்பு போட்டுக் கொள்ளவும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சாஸ் போட்டு அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • பின்பு சோளமாவு போட்டு திக் பண்ணவும். வறுத்த காடை போட்டு எடுக்கவும். சுவையான காடை மஞ்சூரியன் தாயார்.

Nutrition

Serving: 100g | Calories: 489kcal | Carbohydrates: 34g | Sodium: 252mg | Potassium: 356mg | Fiber: 4g | Calcium: 36mg

இதையும் படியுங்கள் : செட்டிநாடு காடை கிரேவி இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க! கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!