உங்க வீட்ல காடை வாங்கினால் இப்படி ஒரு தடவை காடை மிளகு வறுவல் செஞ்சு பாருங்க!!!

- Advertisement -

ஃபர்ஸ்ட் எல்லாம் நம்ம சிக்கன் மட்டன் மீன் இறால் இது மட்டும் தான் சாப்பிடுவோம் ஆனா இப்போலாம் காடை முயல் கறி அப்படின்னு எல்லாமே சாப்பிட ஆரம்பிச்சாச்சு. இதோட டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கு. அந்த வகையில நீங்க காடை வச்சு 65 செஞ்சிருப்பீங்க கிரேவி செஞ்சிருப்பீங்க ஆனா இப்ப நம்ம காடை வச்சு ஒரு சூப்பரான மிளகு வறுவல் செய்ய போறோம்.

-விளம்பரம்-

இந்தக் காடை மிளகு வறுவல் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே பிடிக்கும். மிளகாய் தூள் எதுவுமே சேர்க்காமல் மிளகுத்தூள் சேர்த்து செய்யப் போற இந்த வறுவல் சாப்பிட்டா இருமல் சளி இருந்தா கூட சட்டுனு போயிரும். அந்த அளவுக்கு காரசாரமா ரொம்பவே அட்டகாசமா இருக்கும். தயிர் சாதத்துக்கு இந்த காடை மிளகு வறுவல் வச்சு சாப்பிட்டா அது ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும்.

- Advertisement -

அதுமட்டுமில்லாம வெறும் சாதத்திலேயே இந்த காடை வறுவல் சேர்த்து வச்சு சாப்பிடலாம். இல்லனா அப்படியே சும்மா கூட நீங்க அந்த விலகு ஒரு வேலை வெங்காயம் எலுமிச்சை பழச்சாறு போட்டு சாப்பிடலாம் அதுக்கும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான சுவையான காடை மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
4.50 from 2 votes

காடை மிளகு வறுவல் | Quail Pepper Fry Recipe In Tamil

காடை மிளகு வறுவல் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே பிடிக்கும். மிளகாய்தூள் எதுவுமே சேர்க்காமல் மிளகுத்தூள் சேர்த்து செய்யப் போற இந்த வறுவல் சாப்பிட்டாஇருமல் சளி இருந்தா கூட சட்டுனு போயிரும். அந்த அளவுக்கு காரசாரமா ரொம்பவே அட்டகாசமாஇருக்கும். தயிர் சாதத்துக்கு இந்த காடை மிளகு வறுவல் வச்சு சாப்பிட்டா அது ஒரு சூப்பரானகாம்பினேஷனா இருக்கும். அது மட்டுமில்லாம வெறும் சாதத்திலேயே இந்த காடை வறுவல்சேர்த்து வச்சு சாப்பிடலாம். இல்லனா அப்படியே சும்மா கூட நீங்க அந்த விலகு ஒரு வேலைவெங்காயம் எலுமிச்சை பழச்சாறு போட்டு சாப்பிடலாம் அதுக்கும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time15 minutes
Course: LUNCH, starters
Cuisine: tamil nadu
Keyword: Quail Pepper Fry
Yield: 2
Calories: 489kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 காடை
  • 1 பெரிய வெங்காயம்
  • 7 சின்ன வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சோம்பு தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1/2 டேபிள்ஸ்பூன் சீரகம்
  • மல்லி இலைகள் சிறிதளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 2 பச்சை மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு அதில் பெரிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய்அனைத்தையும் நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ளவும்
  • அதனுடன் மஞ்சள்தூள் சோம்பு தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  • பிறகு அதில் காடையை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.தண்ணீர் வற்றி காடை நன்றாக வெந்து வரும் வரை காத்திருக்கவும்
  • இப்போது மிளகு மற்றும் சீரகத்தை நன்றாக அரைத்து அதில் சேர்த்து விடவும்
  • இறுதியாக மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான காடை மிளகு வறுவல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 489kcal | Carbohydrates: 34g | Sodium: 252mg | Potassium: 356mg | Fiber: 2g | Calcium: 23mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் நண்டு ரோஸ்ட் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!