பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை. இவை எந்த அளவுக்கு பிரபலம் என்றால் பரோட்டாவிற்கு என ஒரு தனி உணவுப் பிரியர்கள் கூட்டமே உண்டு. உணவு பிரியர்களையும் பரோட்டாவையும் அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. பிரியாணிக்கு அடுத்தப்படியாக உணவு பிரியர்கள் அதிகம் விரும்பி, தேடி தேடி உண்ணும் உணவாக உள்ளது பரோட்டா. பரோட்டாவிலும் ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன.
இதனையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் நூல் பரோட்டா வீட்ல இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி சுவை தான்!
பன் பரோட்டா, சில்லி பரோட்டா, வாழை இலை பரோட்டா, கிழி பரோட்டா, கொத்து பரோட்டா, கறி பரோட்டா, கொஸ்து பரோட்டா என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பரோட்டா பிரியர்கள் அதிகம் விரும்பி உண்பது கொத்து பரோட்டா. ரோட்டுக்கடை கொத்து பரோட்டா என்றால் இன்னும் ஸ்பெஷல். நாம் இன்று முள்ளங்கி பராத்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். கூடவே இதனுடன் சால்னா கொஞ்சம் ஊற்றி சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
முள்ளங்கி பரோட்டா | Radish Parotta Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 கரண்டி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் கோதுமை
- 2 முள்ளங்கி
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- எண்ணெய் தேவையானஅளவு
- உப்பு தேவையானஅளவு
செய்முறை
- முள்ளங்கியை துருவி அதில் உப்பு கலந்து சிறிது நேரம் கழித்து அதை பிழிந்து அதிலிருந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் துருவிய முள்ளங்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகம் இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
- கோதுமை மாவு, முள்ளங்கி பிழிந்த தண்ணீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது சப்பாத்தி மாவை உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- சிறிய சப்பாத்திகளாக இட்டு இதற்கு நடுவில் அந்த முள்ளங்கி மசாலா கலவையை வைத்து நன்கு மூடி உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது அதை கொஞ்சம் தடியாக விட்டு வைத்துக் கொள்ளவும். அதை தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி போட்டு எடுக்கவும்.
- சுவையான முள்ளங்கி பரோட்டா ரெடி. இதற்கு சால்னா நன்றாக இருக்கும்.