Home சைவம் வித்தியாசமான சுவையில் கேழ்வரகு அதிரசம் எப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

வித்தியாசமான சுவையில் கேழ்வரகு அதிரசம் எப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நம்ம எல்லாரும் அரிசி மாவுல அதிரசம் செஞ்ச சாப்பிட்டிருப்போம் திணைல அதிரசம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா நம்ம கேழ்வரகுல அதிரசம் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். பொதுவாவே அதிரசம் செய்வதற்கு பக்குவம் மாவு பிசையனும் இல்ல அப்படின்னா அதிரசம் நமக்கு கரெக்டா வராது. சாதாரண அதிரசம் செய்யும்போதே பக்குவம் பார்த்து செய்யணும் இதுல கேழ்வரகு மாவில் அதிரசம் செய்யும் போது இன்னும் கொஞ்சம் கவனமா பக்குவமா செய்கிறோம் ஆனால் நீங்க ரொம்பவும் கஷ்டப்படாம ரொம்பவே ஈஸியா பக்குவமா இந்த மாதிரி கேழ்வரகுல அதிரசம் செய்யலாம்.

-விளம்பரம்-

உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது அதே நேரத்தில் டயட்ல இருக்கவங்க கூட இந்த அதிரசத்தை சாப்பிட்டா அவங்க டயட் பெருசா பாதிக்காது. சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த கேழ்வரகு அதிரசத்தை சாப்பிடலாம் இனிமேல் விசேஷ நேரங்களில் அரிசி மாவுல எப்பவும் ஒரே மாதிரியா அதிரசம் செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி வித்தியாசமா கேழ்வரகு மாவுல அதிரசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிக்கும்.

அதே நேரத்துல சிறுதானியத்தை நம்ம உணவுல எடுத்துக்கறதுனால நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். அதனால இந்த கேழ்வரகு அதிரசத்த அடிக்கடி கூட நீங்க செஞ்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான கேழ்வரகு அதிரசம் பக்குவமா எப்படி ஈசியா வீட்ல செய்யறதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

கேழ்வரகு அதிரசம் | Ragi Adhirasam Recipe In Tamil

உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது அதே நேரத்தில் டயட்ல இருக்கவங்க கூட இந்த அதிரசத்தை சாப்பிட்டா அவங்க டயட் பெருசா பாதிக்காது. சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த கேழ்வரகு அதிரசத்தை சாப்பிடலாம் இனிமேல் விசேஷ நேரங்களில் அரிசி மாவுல எப்பவும் ஒரே மாதிரியா அதிரசம் செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி வித்தியாசமா கேழ்வரகு மாவுல அதிரசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கேழ்வரகு அதிரசம் பக்குவமா எப்படி ஈசியா வீட்ல செய்யறதுன்னு பார்க்கலாம்
Prep Time10 minutes
Active Time25 minutes
Total Time35 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Yield: 4
Calories: 160kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கப் கேழ்வரகு மாவு
  • 2 கப் வெல்லம்
  • 5 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெள்ளத்தை ஒரு பாத்திரத்தில் தட்டி சேர்த்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி பாகு பதத்திற்கு வந்தவுடன் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்
  • பிறகு அதில் கேழ்வரகு மாவை சிறகு சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும் அதனுடன் நெய்யும் சேர்த்து கிளறவும்.
  • மாவு ஆறியவுடன் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதிரசங்களாக தட்டி சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான கேழ்வரகு அதிரசம் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 56g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g

இதையும் படியுங்கள் : சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை ராகி மாவுல இப்படி கேக் செஞ்சு பாருங்க வாயில் வைத்தவுடன் கரையும்!