Home சைவம் சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை ராகி மாவுல இப்படி கேக் செஞ்சு...

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை ராகி மாவுல இப்படி கேக் செஞ்சு பாருங்க வாயில் வைத்தவுடன் கரையும்!

கேக் அப்படின்னாலே குழந்தைங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க நம்ம வீட்ல என்ன விசேஷம் வந்தாலும் இப்பலாம் கேக்குதா அந்த செலப்ரேஷனுக்கு ஒரு இனிப்பாவே இருக்கும். கேக் இல்லாம இப்போ எந்த விசேஷமும் நடக்கிறது இல்ல. ஆனா இப்ப எல்லாம் நிறைய பேரு ஹெல்த் கான்ஷியஸ்சா இருக்கிறதால மைதா மாவில் செஞ்ச கேட்க அவாய்ட் பண்ணிட்டு வராங்க. அவங்க எல்லாரும் கோதுமை மாவுல கேக் செஞ்சு வீட்டிலேயே சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

ஆனா ராகி மாவளையும் ரொம்ப டேஸ்ட்டான கேக் நம்மளால செய்ய முடியும்னு சொன்னா உங்களால  நம்ப முடியுதா. ஆமாங்க ராகி மாவு வச்சு ரொம்பவே ஆரோக்கியமான முறையில் வெள்ளை சர்க்கரையும் சேர்க்காமல் சூப்பரான டேஸ்ட்ல ஒரு கேக் நம்மளால வீட்டிலேயே செய்ய முடியும். குழந்தைகளுக்கு இனிமேல் மைதா மாவுல செஞ்சா கேக் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ராகி மாவு இருந்தா அத வச்சு கேக் செஞ்சு கொடுங்க ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு ஒரு சூப்பரான ராகி கேக் நம்மளால செய்ய முடியும்.

ஒரு 30 லிருந்து 45 நிமிஷத்துக்குள்ளயே சூப்பரான கேக் நம்மளே செஞ்சிடலாம். ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த கேக் செஞ்சு வச்சு இருந்தீங்கன்னா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதைவிட நம்ம வாழ்க்கையில சிறுதானியங்கள் நம்ம சேர்த்துக்கிறது ரொம்பவே முக்கியம் அந்த வகையில் இந்த ராகிய வச்சு அருமையான ஒரு கேக் செஞ்சு கொடுத்தா போதும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான சத்தான ராகி கேக் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்

Print
3 from 1 vote

ராகி கேக் | Ragi Cake Recipe In Tamil

ராகி மாவளையும் ரொம்ப டேஸ்ட்டான கேக் நம்மளால செய்ய முடியும்னு சொன்னா உங்களால  நம்ப முடியுதா. ஆமாங்க ராகி மாவு வச்சு ரொம்பவேஆரோக்கியமான முறையில் வெள்ளை சர்க்கரையும் சேர்க்காமல் சூப்பரான டேஸ்ட்ல ஒரு கேக் நம்மளாலவீட்டிலேயே செய்ய முடியும். குழந்தைகளுக்கு இனிமேல் மைதா மாவுல செஞ்சா கேக் வாங்கிகொடுக்காமல் வீட்டிலேயே ராகி மாவு இருந்தா அத வச்சு கேக் செஞ்சு கொடுங்க ரொம்ப குறைவானபொருட்கள் வச்சு ஒரு சூப்பரான ராகி கேக் நம்மளால செய்ய முடியும்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Ragi Cake
Yield: 4
Calories: 160kcal

Equipment

  • 1 அடி கனமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 2 முட்டை
  • 1 கப் ராகி மாவு
  • 1 கப் நாட்டுச் சர்க்கரை
  • 1 கப் எண்ணெய்
  • 1 கப் பால்
  • 4 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர்
  • 1/4 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1 டீஸ்பூன் பேக்கிங்பவுடர்

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு முட்டை நாட்டு சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்
  • பிறகு பால் கொக்கோ பவுடர் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் வெண்ணிலா எசன்ஸ் அனைத்தும் சேர்த்து நன்றாகஅரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ளதை கலந்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கனமான பாத்திரத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து பத்து நிமிடங்கள் சூடேற்றவும்.
  • பத்து நிமிடங்களுக்கு பிறகு கேக் செய்யப் போகும் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதன் மேல் சிறிதளவுராகி மாவு சேர்த்து பரப்பிக் கொள்ளவும்.
  • பிறகு கலந்து வைத்துள்ள கலவையை அதில் சேர்த்து 30 லிருந்து 40 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்துஎடுத்தால் சுவையான ராகி கேக் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 56g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g

இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சுவையான கவுனி அரிசி இடியாப்பம் ஒரு முறை இது போன்று செஞ்சி பாருங்கள்!