நம்ம குழந்தைங்க எப்பவுமே ஈவினிங் டைம்ல ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த நேரத்தில் நம்ம அவங்களுக்கு பஜ்ஜி பக்கோடா பிரட் ஆம்லெட் பிரட் டோஸ்ட் பதிலா ஆரோக்கியமா சிறுதானியங்கள் வச்சு ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுத்தா குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். அந்த வகையில இப்ப நம்ம ராகி மாவும் வேர்க்கடலையும் சேர்த்து செய்யப்போற ராகி சிமிலி தான் பார்க்க போறோம். வெல்லம் சேர்த்து இனிப்பா செய்றதால இந்த ராகி சுமதி குழந்தைகளுக்கு கண்டிப்பா ரொம்ப பிடிக்கும்.
எத்தனை உருண்டை வேணாலும் சாப்பிடுவாங்க ஒரே ஒரு தடவை மட்டும் உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் இது உங்க குழந்தைகளோட ஃபேவரட் ஆகவே மாறிடும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ்னா இந்த ராகி சிமிலி. மாலை வணக்கம் ஸ்கூலுக்கு போகும் போது குழந்தைகளோட ஸ்னாக்ஸ் பாக்ஸுக்கும் இந்த ராகி சிம்லிய கொடுத்து பாருங்க கண்டிப்பா ஈவினிங் வரும்போது காலியாக்கிட்டு தான் வருவாங்க.
அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் தான் இது பொதுவா சிறுதானியங்களை நம்ம உணவுகள்ல சேர்த்துக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனா குழந்தைகளுக்கு வேற ஏதாவது ஒரு உணவு மூலமா சிறுதானியங்கள் கொடுக்க முடியாது சாப்பிடவும் மாட்டாங்க அந்த மாதிரி சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி இனிப்பா ஏதாவது செஞ்சு கொடுத்தா அவங்க சிறுதானியம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் ஸ்னாக்ஸ் வேலையும் முடிஞ்ச மாதிரி இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான சத்தான ராகி சிமிலி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
ராகி சிமிலி | Ragi Chimili Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ராகி மாவு
- 1 கப் வேர்க்கடலை
- 1 1/2 கப் வெல்லம்
- உப்பு சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 2 ஏலக்காய்
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- பிறகு ஒரு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து அடை போல் தட்டி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- வேக வைத்த ராகி அடையை நன்றாக ஆற வைக்கவும். ஆரியபிறகுஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- பிறகு வேர்க்கடலையையும் வெல்லம் மற்றும் ஏலக்காயும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது அனைத்தையும் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான ராகி சிமிலி தயார்