சாதாரண பூரியை சத்தான பூரியாக மாற்றுவதற்கு இப்படி செய்து பாருங்க அதோட கொஞ்சம் இந்த பொருளையும் சேர்த்து அரைங்க!

- Advertisement -

ராகி பூரி என்றவுடன் ஏதோ சுவை குறைவாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் ராகி  உணவு பெரும்பாலான குழந்தைகள் உண்ணுவதே கிடையாது. ராகியில் அத்தனை சத்துக்கள் அடங்கியுள்ளது இதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ராகி உணவு என்றாலே குழந்தைகள் தலைதெறிக்க ஓட தான் செய்கிறார்கள். இது போன்ற முறையில் ராகியை சமைத்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும் நாமும் வித்தியாசமான முறையில் குழந்தைகளுக்காக புதுமையான டிபன் செய்து கொடுத்தது போல இருக்கும். அப்படி ஒரு நல்ல ஹெல்தியான டிபன் பூரி இது எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

நம்மூரில் பூரி செய்வதென்றால் கோதுமை மாவு அல்லது மைதா மாவு இதை வைத்து தான் செய்வார்கள். இந்த ராகி பூரியை  அட்டகாசமான சுவையில் செய்து விடலாம். வாங்க இப்போ அந்த ஸ்பெஷல் பூரியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தென்னிந்திய உணவகங்களில் பூரி இல்லாமல் இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட பூரியை நம் வீட்டில் செய்வதற்கு எந்த பொருளை சேர்த்தால் இன்னும் கூடுதல் சத்தான பூரிபெற முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். ராகி பூரி எளிதில் ஜீரணமாக கூடிய ஒரு உணவு என்பதால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது.  அப்படி எளிதில் ஜீரணமாக கூடிய இந்த சத்தான  ராகி பூரியை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

Print
2.50 from 2 votes

ராகி பூரி | Ragi Poori Recipe In Tamil

நம்மூரில் பூரி செய்வதென்றால் கோதுமை மாவு அல்லது மைதா மாவு இதை வைத்து தான் செய்வார்கள். இந்த ராகி பூரியை அட்டகாசமான சுவையில் செய்து விடலாம். வாங்க இப்போ அந்த ஸ்பெஷல் பூரியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம். தென்னிந்திய உணவகங்களில் பூரி இல்லாமல் இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட பூரியை நம் வீட்டில் செய்வதற்கு எந்த பொருளை சேர்த்தால் இன்னும் கூடுதல் சத்தான பூரிபெற முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். ராகி பூரி எளிதில் ஜீரணமாக கூடிய ஒரு உணவு என்பதால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. அப்படி எளிதில் ஜீரணமாக கூடிய இந்த சத்தான ராகி பூரியை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Ragi Poori
Yield: 4
Calories: 648kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி மாவு
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 தேக்கரண்டி ரவை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிக்க

செய்முறை

  • தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
  • மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பூரி மாவாக பிசைந்து கொள்ளவும்.
  • மாவை நீளமாக உருட்டி அதை சிறுத் துண்டுகளாக வெட்டி உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒவ்வொரு உருண்டையையும் பூரிகளாக திரட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

Nutrition

Serving: 500g | Calories: 648kcal | Carbohydrates: 36g | Sodium: 352mg | Potassium: 456mg | Fiber: 6g