காசிக்கு சென்றால் அடுத்தது ஏன் ராமேஸ்வரமும் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா ?

- Advertisement -

காசிக்கு அடுத்து ராமேஸ்வரத்தை ஏன் அனைவரும் தீர்த்தமாட செல்கிறார்கள். காசிக்கு சென்று வந்தால் ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்? காசியிலிருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசுவாமிக்கு தீர்த்தா அபிஷேகம் செய்தால் மட்டுமே காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்று ஏன் கூறுகிறார்கள்.? அப்படி ராமேஸ்வரத்தில் பாவங்கள் தீர்வதற்கான காரணம் என்ன? காசி கயாவிற்கு அடுத்தபடியாக ராமேஸ்வரத்தில் தான் பாவங்கள் தீர தீர்த்தமாடி பித்ரு தோஷ நிவர்த்தி பித்ருக்களுக்கு திலஹோமங்கள் எல்லாம் செய்வதற்கான காரணங்கள் என்ன? ராமருடைய பாவத்தையே நீக்கிய ஸ்தலம் என்பதால் நம் போன்று சாதாரண மக்களின் பாவத்தை நிவர்த்தி செய்யாத என்ன? அதற்காகத்தான் அந்த தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் தீர்ந்து போகிறது என்று கூறுகிறார்கள். சீதையை கடத்திச் சென்ற ராவணனை போரிட்டு போரில் வென்ற ராமர் சிவபக்தனாகிய ராவணனை கொன்றதால் வந்த பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்கு ராமேஸ்வரத்தில் மணலில் சிவலிங்கம் பிடித்து வைத்து இறைவனை வேண்டி பூஜை செய்து தீர்த்தம் ஆடினாராம்.

-விளம்பரம்-

அப்படி சிவனின் அருளால் பெரும் சிவ பக்தனை கொன்ற பாவம் நீங்கி நல்லருள் பெற்றாராம். ராமர் இப்படி பிடித்து வைத்த சிவலிங்கம் ராமநாதசுவாமி என்று அழைக்கப்படுகிறது. ராமனின் பாவத்தை தீர்த்து அவரை சுத்தப்படுத்திய தீர்த்தங்கள் எல்லாம் அங்கேயே தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட தீர்த்தங்களில் நாமும் நீராடி நம்முடைய பாவங்களை போக்கிக் கொள்வோம். இதில் முக்கியதும் பெரியதுமான தீர்த்தம் அக்னி தீர்த்தம் வேறு எங்கும் கடலுக்கு அக்னி என்ற பெயரில்லை. இங்கே ராமேஸ்வரத்தில் கடலுக்கு அக்கினி தீர்த்தம் என்று பெயர். மற்ற 22 தீர்த்தங்களும் கோயிலுக்கு உள்ளேயே இருக்கின்றன இதில் கோடி தீர்த்தம் ராமருடைய அம்பால் தோற்றுவிக்கப்பட்டது. ஆகையால் அந்த தீர்த்ததால் தான் ராமநாத சுவாமிக்கும், தாயாருக்கும் மற்ற தெய்வங்களுக்கெல்லாம் தினமும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இப்படிப்பட்ட ராமேஸ்வரத்தில் இந்த 22 தீர்த்தங்களிலும் எதற்காக தீர்த்தமாட வேண்டும் அப்படி தீர்த்தம் ஆடினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ராமேஷ்வர தீர்த்தங்களின் மகிமை

அக்னி தீர்த்தம்

இங்குள்ள கடலைத் தவிர வேறு எந்த கடலுக்கும் அக்னி என்று பெயர் வரவில்லை . காரணம் இலங்கையிலிருந்து சீதா தேவியை மீட்ட பிறகு ராமர் சீதா தேவியின் கற்பை சந்தேகித்து தீயில் இறங்கச் செய்தார். அப்படி தீயில் இறங்கும் பொழுது சீதா தேவியின் கற்பின் தீ அக்னியை சுட்டதாகவும் அந்த நெருப்பின் சூடு தாங்க முடியாமல் அக்னியே அந்த கடலில் மூழ்கி தீர்த்தம் ஆடியதாகவும் கூறுகிறார்கள். ஆகையால் இந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். இந்த தீர்த்ததில் நீராடி மாகாளய அமாவாசை மற்றும் அமாவாசை தினங்களில் இறந்து போன முன்னோர்களுக்கு தில ஹோமமும் பித்ரு தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆசியை கிடைக்க செய்யும்.

மகாலட்சுமி தீர்த்தம்

-விளம்பரம்-

இந்த தீர்த்தில் நீராடினால் செல்வ வளமும், சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்.

சாவித்ரி தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் சொல் வளம் பெருகும் . அதாவது எமனிடமே வாதாடி தன் கணவனின் உயிரை மீட்டு வந்த சாவித்திரியை போன்று பேச்சுதிறன் பெருகும்.

-விளம்பரம்-

காயத்ரி தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் உலக நன்மை ஏற்படும். நாம் நல்வழிபடுத்தபடுவோம்.

சரஸ்வதி தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் அறிவு வளர்ச்சி, புத்தி கூர்மை ,கல்வி வளம் உயரும்.

சங்கு தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் சுக போக வசதி வாழ்வு தரும்.சகல வசதிகளோடும் வாழ்வோம்.

சக்கர தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் மன உறுதி உண்டாகும். செய்யும் செயலை திடத்தோடு செய்யும் உறதி பெருகும்.

சேது மாதவ தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் தடைபட்ட பணிகள் வெற்றி பெறும். எடுத்த காரியம் வெற்றி அடையும்.

நள தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் தடைகள் நீங்கும். வாழ்வில் முன்னேற்ற பாதையில் செல்வோம்.

நீல தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் எதிரிகள் நீங்குவர். நம்மை எதிர்ப்பவர்கள் நீங்கிவிடுவார்கள.

கவய தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் பகை மறையும் பகைவன் இல்லா வாழ்வை பெறலாம்.

கவாட்ச தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் கவலை தீரும். அனைத்து விதமான கவலைகளும் தீர்ந்துவிடும்.

கந்தமாதன தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் உங்கள் துறையில் வல்லுநர் ஆகலாம். செய்யும் தொழிலில் நாமே முதன்மையானவராக இருப்போம்.

பிரமஹத்தி தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் பிரமஹத்தி தோ‌ஷம் தீரும். கொலை பாதக செயல்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

கங்கா தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் பாவங்கள் பொடிபடும். செய்த பாவங்கள் தீரும்.

யமுனை தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் பதவி சேரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

கயா தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் முன்னோர் ஆசி கிடைக்கும். நம் முனோர்களின் கோபம் மறைந்து ஆசிர்வாதம் கிடைக்கும்.

சர்வ தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். கர்மதால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும்.

சிவ தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் சகல பிணிகளும் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

சத்யா மிர்த தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் ஆயுள் விருத்தியாகும்.

சந்திர தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் கலை ஆர்வம் அதிகரிக்கும். பிடித்த கலையில் ஆதிக்கம் செலுத்த தொடங்குவோம்.

சூரிய தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் தலைமைப் பண்பு, முதன்மை ஸ்தானம் கிடைக்கும். எந்த துறையாய் இருந்தாலும் முதலிடம் கிடைக்கும்.

கோடி தீர்த்தம்

இந்த தீர்த்தில் நீராடினால் முக்தி அடையலாம். அனைத்தையும் விட பெரிய பேறு என்றால் அது முக்தி அடைந்து இறைவனை சரண் அடைவது. அந்த பெரிய பேறு இந்த தீர்த்தில் நீராடுவதால் கிடைக்கிறது.