Home சட்னி இட்லி, தோசைக்கு ஏற்ற கர்நாடக ஸ்பெஷல் ரஞ்சக்கா‌ சட்னி இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

இட்லி, தோசைக்கு ஏற்ற கர்நாடக ஸ்பெஷல் ரஞ்சக்கா‌ சட்னி இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ஒரு சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு கர்நாடகா ரெசிபியை செய்யுங்கள். அது தான் கர்நாடக ஸ்பெஷல் மிளகாய் சட்னி. இந்த மிளகாய் சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாண்விட்ச் உடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இட்லி, தோசை போன்றவற்றிற்கு சட்னி ஒரு சூப்பரான சைடு டிஷ். அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் சட்னி தான். ஆனால் அந்த தேங்காய் சட்னிக்கு பதில் மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இந்த மிளகாய் சட்னியை பலவாறு சமைப்பார்கள். இப்போது அதில் ஒரு முறை இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

இதை படித்து முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்கள் சமைப்பதற்கு சரியாக இருக்கும். பொதுவாக சமையலில் சிவப்பு மிளகாயை காரத்துக்காக சேர்த்துக் கொள்வோம். ஆனால், அதே சிவப்பு மிளகாயில் சட்னி அரைத்து உண்டால் எப்படியிருக்கும். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே பக்குவமாக இந்த காரசாரமான சிவப்பு மிளகாய் சட்னி செய்து விடலாம். நாக்கை இழுத்து இழுத்து காரசாரமாக சாப்பிட கூடிய ஒரு மிளகாய் சட்னியை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Print
No ratings yet

ரஞ்சக்கா‌ சட்னி | Ranjaka Chutney Recipe In Tamil

உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ஒரு சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு கர்நாடகா ரெசிபியை செய்யுங்கள். அது தான் கர்நாடக ஸ்பெஷல் மிளகாய் சட்னி. இந்த மிளகாய் சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாண்விட்ச் உடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இட்லி, தோசை போன்றவற்றிற்கு சட்னி ஒரு சூப்பரான சைடு டிஷ். அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் சட்னி தான். ஆனால் அந்த தேங்காய் சட்னிக்கு பதில் மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்கள் சமைப்பதற்கு சரியாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: karnataka
Keyword: Ranjaka Chutney
Yield: 4 People
Calories: 40kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 தாளிப்பு கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு சிறிதளவு
  • எண்ணெய் சிறிதளவு
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 5 பல் பூண்டு

செய்முறை

  • முதலில் காய்ந்த மிளகாயில் காம்பினை நீக்கி விட்டு 7 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் இந்த தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு‌ மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் வர மிளகாய், துருவிய பூண்டு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனுடன் சிறிதளவு சர்க்கரை மற்றும் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும். அதன்பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் காரசாரமான கர்நாடக ஸ்பெஷல் சிவப்பு மிளகாய் சட்னி தயார். இது சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 40kcal | Carbohydrates: 3.69g | Protein: 8.4g | Fat: 4.4g | Sodium: 9mg | Potassium: 145mg | Fiber: 2.7g | Vitamin A: 7IU | Vitamin C: 26mg | Calcium: 14mg | Iron: 4.6mg

இதனையும் படியுங்கள் : ருசியான கர்நாடகா கத்தரிக்காய் சாதம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி கூட!