சட்டுனு ரசம் வைக்க நினைத்தால் சூப்பரான இந்த தீடீர் ரசப்பொடிய செஞ்சு வச்சுக்கோங்க அவசரத்திற்கு உதவும்!

- Advertisement -

நம்ம சைவம் சாப்பிட்டாலும் சரி அசைவம் சாப்பிட்டாலும் சரி என்ன சாப்பிட்டாலும் கடைசியா ரசம் ஊத்தி குடிச்சோம் அப்படின்னா அப்பதான் அந்த சாப்பாடு நமக்கு முழுமையடையும். ஒரு சிலர் இந்த ரசம் வைப்பது எப்படி மசாலா அரைச்சி வைப்பாங்க ஒரு சிலர் கடையில ரசப்பொடி வாங்கி ரசம் வைப்பாங்க. ஆனா கடையில நம்ம வாங்குற ரசப்பொடியை விட ஃப்ரெஷ்ஷா அரைசக்கிற ரசப்பொடில ரசம் வச்சோம் அப்படின்னா நாலு வீட்டுக்கு மணக்கும் அப்படின்னு சொல்லலாம்.

-விளம்பரம்-

அந்த அளவுக்கு நம்ம அரைச்சி வைக்கிற மசாலாவோட ருசி தனியா இருக்கும். ஆனா இப்போ இருக்கிற வேகமான உலகத்துல நம்ம எல்லாமே முன்னாடியே செஞ்சு வச்சுக்கிறது ரொம்பவே நல்லது. வேலைக்கு போறவங்க எல்லாரும் காலைல பிரெஷ்ஷா இருந்துச்சு ரசம் வைக்கிறது கஷ்டம் அவங்களுக்காகவே முன்னாடியே நம்ம செஞ்சு வைக்கக்கூடிய ஒரு சூப்பரான ரசப்பொடிய தான் இப்ப பாக்க போறோம்.

- Advertisement -

நம்ம என்னதான் கடையில வாங்கி செஞ்சாலும் வீட்ல நம்ம செய்ற மாதிரி வராது. இந்த ரசப்பொடி மட்டும் நம்ம அரைச்சு வச்சுக்கிட்டா போதும் காலையில சட்டுனு வேலை முடியணும் அப்படின்னா இந்த ரசப்பொடியை வைத்து ரசம் வச்சுட்டு அப்பளம் பொறித்தால் போதும் டக்குனு வேலை முடிந்துவிடும். வீட்ல இருக்கிறவங்களுமே கூட இந்த ரசப்பொடியா அரைச்சு வச்சுக்கிட்டா வேல டக்குனு முடிஞ்சுரும் ரொம்ப நேரம் நம்ம கிச்சனுக்குள்ள இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி அதே நேரத்துல சுவையையும் அதிகப்படுத்தி கொடுக்கக்கூடிய இந்த ரசப்பொடி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
3 from 2 votes

ரசப்பொடி| Rasam podi Recipe In Tamil

நம்ம என்னதான் கடையில வாங்கி செஞ்சாலும் வீட்ல நம்மசெய்ற மாதிரி வராது. இந்த ரசப்பொடி மட்டும் நம்ம அரைச்சு வச்சுக்கிட்டா போதும் காலையில சட்டுனு வேலை முடியணும் அப்படின்னா இந்த ரசப்பொடியை வைத்து ரசம் வச்சுட்டு அப்பளம் பொறித்தால் போதும் டக்குனு வேலை முடிந்துவிடும்.வீட்ல இருக்கிறவங்களுமே கூட இந்த ரசப்பொடியா அரைச்சு வச்சுக்கிட்டா வேல டக்குனு முடிஞ்சுரும் ரொம்ப நேரம் நம்ம கிச்சனுக்குள்ள இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி அதே நேரத்துல சுவையையும் அதிகப்படுத்தி கொடுக்கக்கூடிய இந்த ரசப்பொடி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: dinner, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Rasam Podi
Yield: 4
Calories: 157kcal

Equipment

  • 1 அகலமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 6 காய்ந்த மிளகாய்
  • 1/4 கப் தனியா
  • 3/4 கப் துவரம் பருப்பு
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் வெந்தயம்
  • 5 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் ஊற்றாமல் துவரம் பருப்பை போட்டு நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ளவும். வறுத்ததை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இதே போல் தனியாவையும் போட்டு நன்றாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்து வெயிலில் காய வைக்கவும்.
  • பிறகு மிளகு சீரகம் வெந்தயம் அனைத்தையும் போட்டு நன்றாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். இறுதியாக அதே கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை போட்டு நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • வறுத்து எடுத்தவை அனைத்தையும் வெயிலில் நன்கு காய வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில்போட்டு நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்
  • நாலு வீட்டுக்கு மணக்க கூடிய ரசப்பொடி அட்டகாசமான முறையில் தயார். இதை வைத்து ஒருமுறை ரசம் வைத்தால்போதும் உங்களுக்கு அந்த சுவை மிகவும் பிடித்து விடும்.

Nutrition

Serving: 500g | Calories: 157kcal | Carbohydrates: 65g | Protein: 13g | Sodium: 41mg | Potassium: 231mg | Fiber: 2g