நாம் பலவகையான லட்டு சாப்பிட்டு இருப்போம். மோதி லட்டு, பூந்தி லட்டு, டிரை ஃப்ரூட்ஸ் லட்டு, சிறுதானிய லட்டு என பல லட்டுக்களை சாப்பிட்டு ருசித்து இருப்போம். குழந்தைகளுக்கும் லட்டு என்றாலே மிக மிக பிடிக்கும். எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். பொதுவாக கடைகளில் வாங்குகின்ற லட்டுக்கள் மட்டுமே சுவையாக இருக்கும் என்று நான் நினைத்திருப்போம்.
ஆனால் இப்பொழுதெல்லாம் வீடுகளிலே கடைகளில் கிடைக்கின்ற லட்டுக்கள் போன்று நம்மால் செய்ய முடியும். சுவையும் கடைகளில் கிடைப்பது போன்று இருக்கும். நாம் அந்த வகையில் இன்று கடைகளில் கிடைக்கும் ரவா லட்டு போன்று வீட்டிலேயே செய்யப் போகிறோம். நம் வீட்டில் ஏதாவது விசேஷங்களோ அல்லது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலோ இந்த ரவா லட்டு வீட்டில் செய்தால் சட்டென்று காலியாகி விடும்.
அந்த அளவிற்கு மிகுந்த ருசி கொண்டது தான் இந்த ரவா லட்டு. மிகவும் எளிமையாக ஒரு அரை மணி நேரத்திலேயே இந்த லட்டுவை செய்துவிடலாம். ரவையை நன்றாக வறுத்து மணக்க மணக்க நெய்விட்டு செய்கின்றாய் இந்த ரவா லட்டு வாசனை வீடு எங்கும் மணக்கும். அப்படி வீடே மணக்கின்ற மிகவும் ஒரு அருமையான லட்டுவை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். வாங்க பார்க்கலாம்.
ரவா லட்டு | Rava Laddu Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ரவை
- 1/4 கப் நெய்
- 2 கப் சர்க்கரை
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1/2 கப் பால்
- 10 முந்திரி
- 10 திராட்சை
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி திராட்சையை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி ரவையை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த சூடான ரவையை போட்டு சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
- எடுத்து வைத்துள்ள பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவேண்டும். காய்ச்சிய பாலை ரவை கலவையில் ஊற்றி கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக இறுக்கமாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
- இப்பொழுதுவறுத்த ரவையில் செய்த சூப்பரான ரவா லட்டு தயார்.