Home சைவம் வீட்ல இட்லி மாவு இல்லனா இந்த ரவா ஊத்தப்பம் செய்யுங்க!

வீட்ல இட்லி மாவு இல்லனா இந்த ரவா ஊத்தப்பம் செய்யுங்க!

வீட்ல நம்ம எப்பவுமே இட்லி மாவு வச்சிருப்போம். அதுக்கு காரணம் நம்ம வீட்ல அடிக்கடி இட்லி தோசை தான் செய்வோம். அதுக்காக நம்ம வீட்ல எப்பவுமே மாவு அரைச்சு வச்சிருப்போம். ஒரு சிலருக்கு வீட்டில் மாவு இல்லனா கை உடைஞ்ச மாதிரி இருக்கும். எதுவுமே இல்லையென்றால் கூட தோசை சுட்டு அதற்கு இட்லி பொடி வச்சு சாப்பிட்டு வேலைய முடிச்சிடலாம்.அந்த அளவுக்கு இட்லி மாவு எல்லா சமயத்துலயும் கை கொடுக்கும்.

-விளம்பரம்-

ஆனா இட்லி மாவு இல்லாத சமயத்தில் நமக்கு ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்க கூடிய ஒரு இன்ஸ்டன்ட் தோசை தான் பார்க்க போறோம்.இதுக்கு நம்ம வீட்ல ரவை இருந்தாலே போதும்.சட்டுனு ஒரு டிபன் ரெசிபி செஞ்சுடலாம்.ஒரு வேளை உங்களுக்கு ஒரே மாதிரியான டிபன் சாப்பிட போர் அடிச்சா கூட இந்த டிபன் செஞ்சு சாப்பிடுங்க.இந்த டிபன் செய்றது ரொம்பவே ஈஸி தான்.

இந்த டிபன் செஞ்சு கூடவே ஒரு தக்காளி சட்னி செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே ருசியா இருக்கும்.சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இன்ஸ்டன்ட் தோசை ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
1 from 1 vote

ரவா ஊத்தப்பம் | Rava Uthappam Recipe In Tamil

வீட்ல நம்ம எப்பவுமே இட்லி மாவு வச்சிருப்போம். அதுக்கு காரணம் நம்ம வீட்ல அடிக்கடி இட்லி தோசைதான் செய்வோம். அதுக்காக நம்ம வீட்ல எப்பவுமே மாவு அரைச்சு வச்சிருப்போம். ஒரு சிலருக்குவீட்டில் மாவு இல்லனா கை உடைஞ்ச மாதிரி இருக்கும். எதுவுமே இல்லையென்றால் கூட தோசைசுட்டு அதற்கு இட்லி பொடி வச்சு சாப்பிட்டு வேலைய முடிச்சிடலாம்.அந்த அளவுக்கு இட்லிமாவு எல்லா சமயத்துலயும் கை கொடுக்கும். இந்த டிபன் செஞ்சு கூடவே ஒரு தக்காளி சட்னி செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே ருசியா இருக்கும்.சின்னகுழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இன்ஸ்டன்ட்தோசை ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Rava Uthappam
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ரவை
  • 1/2 கப் தயிர்
  • 1/4 டீஸ்பூன் சோடா உப்பு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் ரவையை சேர்த்து அதனுடன் தயிர் சோடா உப்பு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி ஊத்தப்பம் ஆக ஊற்றி இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் சுவையான ரவை ஊத்தப்பம் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Vitamin A: 5.37IU | Vitamin C: 12.6mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு சூப்பரான கேரட் முட்டைகோஸ் ஊத்தப்பம் இப்படி செய்து பாருங்க!