வட இந்திய உணவுகள்ல ரேஷ்மி சிக்கன்கு எப்பவுமே நல்ல ஒரு வரவேற்பு கண்டிப்பாக இருக்கும்.வட இந்தியாவில் ரொம்ப ஃபேமஸான் ரேஷ்மி சிக்கன் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள இருக்கிறோம். ரொம்பவே சாப்ட்ட ரொம்ப கிரீமியான சுவையில இந்த ரேஷ்மி சிக்கன் செஞ்சு சாப்பிடலாம்..
இந்த ரேஷ்மி சிக்கன சாதத்துக்கு சப்பாத்திக்கு தோசை எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம். ஒரு ஒரு ஊருக்கு ஒரு.ஒரு வகையான உணவுகள் ஸ்பெஷலா செய்வாங்க. அந்த மாதிரி இது வட இந்தியாவில் ரொம்பவே பேமஸ் ஆன ஒரு உணவு வகை. இந்த ரேஷ்மி சிக்கன் ரொம்பவே சுவையா இருக்கும். சிக்கன் உணவுகள் சுவையான உணவுகள் மட்டும் கிடையாது அதிக அளவு புரதச்சத்துள்ள ஒரு உணவு. கிடையாது சிக்கன் சமைக்கும் பொழுது சிக்கனை தயிர்ல ஒரு பத்து நிமிஷம் ஊறவெச்சு சமைக்கும்போது சீக்கிரமா நல்லா சாப்டா வேகறது மட்டுமில்லாமல் நல்ல ருசியையும் கொடுக்கும்.
அதனால் சிக்கனை சமைக்கிறதுக்கு முன்னாடி ஒரு பத்து நிமிஷம் தயிர்ல ஊற வச்சு சமைச்சோம்னா ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த சுவையான வட இந்திய ரேஷ்மி சிக்கன எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்க போறோம். எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச இந்த சுவையான ரேஸ்மி சிக்கன் எப்படி சமைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ரேஷ்மி சிக்கன் | Reshmi Chicken Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ சிக்கன்
- 1 கப் தயிர்
- 1 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
- 1/2 ஸ்பூன் கரமசாலா
- 1 ஸ்பூன் மிளகாய்தூள்
- 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 2 பச்சைமிளகாய்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 12 எலுமிச்சைபழம்
- 1 வெங்காயம்
- 15 முந்திரி
- 1 பிரிஞ்சிஇலை
- கொத்தமல்லி சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு சுத்தம் செய்துஎடுத்து வைத்துள்ள சிக்கனில் தயிர் ,கஸ்தூரி மேத்தி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துநன்றாக பிசறி கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் , மிளகாய் தூள்சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும. பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசறி ஒரு 15 நிமிடம்ஊற வைக்கவும்.
- பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அதனோடு முந்திரிப் பருப்பை சேர்த்து விழுதாகஅரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய முந்திரி விழுதை சேர்த்து நன்றாக ஒரு பத்து நிமிடம்வதக்கவும்.
- பின்பு மசாலாவோடு கலந்து ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு தண்ணீர் சேர்க்காமல் மூடிபோட்டு வேக வைக்கவும்.அவ்வப்போது மூடியை திறந்து சிக்கனை கலந்து விட்டு நன்றாக வேகவைக்கவும்.
- சிக்கன் வெந்த பிறகு அதில் கொத்தமல்லி தழைகளை தூவிஇறக்கினால் மிகவும் ருசியான கிரீமியான ரேஷ்மி சிக்கன் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : குக் வித் கோமாளியில் ரோசினி செய்த ஹரியாலி சிக்கன் ரெசிபி இது தான் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!