கடலைப்பருப்பு போட்டு பீர்க்கங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

- Advertisement -

பீர்க்கங்காய் ஒரு கோடி வகை காயாகும். பீர்க்கங்காயில் உள்ள இலைகள், காய்கள், வேர்கள், விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இந்த பீர்க்கங்காய் தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பீர்க்கங்காய் விதையிலிருந்து எடுக்கப்படும் என்னை தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. கண்பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள் பீர்க்கங்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

-விளம்பரம்-

பீர்க்கங்காயில் உள்ள அதிக அளவு வைட்டமின்கள், தாது உப்புக்கள் இருக்கின்றன. பீர்க்கங்காய் நார்ச்சத்தும் நீர் சத்தும் அதிக அளவில் இருக்கின்றது. பீர்க்கங்காய் இலையின் சாறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது. பீர்க்கங்காய் சாறு மஞ்சள் காமாலையை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது. இதில் உள்ள தாது உப்புக்கள் நோய் தொற்றுக்களை குறைக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. இதில் இரும்புச் சத்து தாது உப்புக்கள் மக்னீசியம் போன்றவை இருக்கின்றன.

- Advertisement -

பீர்க்கங்காய் சொறி சிரங்கு புண்களுக்கு எல்லாம் நல்ல மருந்து இருக்கின்றது. நார்ச்சத்து உள்ள காய்கறி ஆகையால் மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கின்றது. செரிமானத்தை தூண்டுகின்றது. வயிற்றில் அமில சுரப்பை தடுத்து புண்கள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.சரும நோய்கள் இருப்பவர்கள் பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த சுத்திகரிப்பாகி உடலுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. பீர்க்கங்காய் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கின்றது. அதை நன்மைகள் கொண்ட பீர்க்கங்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. பீர்க்கங்காய் சாம்பார் ,கூட்டு மற்றும் புளி குழம்பு கூட சேர்த்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்பொழுது பீர்க்கங்காயில் சுவையான சத்தான பொரியல் செய்து சாப்பிட இருக்கிறோம்.

Print
5 from 1 vote

பீர்க்கங்காய் பொரியல் | Ridge Gourd Stir Fry In Tamil

பீர்க்கங்காயில் உள்ள அதிக அளவு வைட்டமின்கள், தாது உப்புக்கள் இருக்கின்றன. பீர்க்கங்காய் நார்ச்சத்தும் நீர் சத்தும் அதிக அளவில் இருக்கின்றது. பீர்க்கங்காய் இலையின் சாறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது. பீர்க்கங்காய் சாறு மஞ்சள் காமாலையை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது. இதில் உள்ள தாது உப்புக்கள் நோய் தொற்றுக்களை குறைக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. இதில் இரும்புச் சத்து தாது உப்புக்கள் மக்னீசியம் போன்றவை இருக்கின்றன.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ridge gourd Stir Fry
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 பீர்க்கங்காய்
  • 2 ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 வெங்காயம்
  • 4 பச்சைமிளகாய்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்

தாளிக்க

  • எண்ணெய் தேவையானஅளவு
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 சிட்டிகை பெருங்காயம்

செய்முறை

  • முதலில் பீரக்கங்காயை நீரில் கழுவிவிட்டு தோலை  நீக்கிவிட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
     
  • பின் ஒரு கடாயில் நீரை ஊற்றி மஞ்சள்தூள் சேர்த்து ஊற வைத்த கடலைப்பருப்பைசேர்த்து மூட் போட்டு வேக வைக்கவும்.
     
  • கடலைப் பருப்பை ஊற வைக்க மறந்திருந்தால் குக்கரில் சேர்த்து 3 விசில் வரும்வரை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  • கடலைப்பருப்பை நசுக்கி பார்த்தால் நன்றாக மைய நசுங்க வேண்டும்.பின் ஒரு வானெலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து , கறிவேப்பிலை,  பச்சைமிளகாய்சேர்த்து வதக்கவும்.
     
  • பொடியாக நறுக்கிய வெங்காயம்  சேர்த்துபொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் நறுக்கிய பீர்க்கங்காயை  வானெலியில்  சேர்த்துநன்றாக வதக்கி மூடி போட்டு மீடியம் ஃப்லேமில் வேக வைக்கவும்.
  • நீர் சேர்க்க தேவையில்லை பீர்க்கங்காயில் உள்ள நீரிலேயே வெந்து வரும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும். பீர்க்கங்காய் அறை பதத்திற்கு வெந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்த்து கிளறிவிடவும்.
  • பீர்க்கங்காய் நீர் வற்றி நன்றாக வெந்ததும்  துருவியதேங்காய் சேர்த்து நன்றாக கலந்து  விட்டுவேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறினால் சூடான சுவையான சத்து மிக்க பீர்க்கங்காய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 2g | Sodium: 213mg | Potassium: 3.2mg | Fiber: 1.4g | Vitamin A: 13IU | Calcium: 23.34mg