Home சட்னி ரோட்டு கடை ஸ்டைல் ருசியான அவிச்ச சட்னி இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட இப்படி...

ரோட்டு கடை ஸ்டைல் ருசியான அவிச்ச சட்னி இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட இப்படி செஞ்சி பாருங்கள்!

என்னதான் வீட்ல நிறைய வகையில சட்னிகள் செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடைகள்ல கிடைக்கிற சட்னியோட சுவை எங்கேயுமே கிடைக்கிறது இல்லை. அப்படி ரோட்டு கடைகளில் செய்ற சட்னில ஒரு ஸ்பெஷலான சட்னி தான் அவிச்ச சட்னி. இந்த சட்னியை கல் தோசைக்கெல்லாம் சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப வே சுவையா இருக்கும்.

-விளம்பரம்-

நம்ம பார்த்து பார்த்து எவ்வளவு பக்குவமா  வீட்டுல சட்னி செய்தாலும் அந்த சட்னி ரோட்டு கடைகளில் கிடைக்கிற சுவைல இருக்கிறதே கிடையாது. எப்பவும் வீட்ல இருக்கிறவங்க என்ன சொல்லுவாங்க அன்னைக்கு அந்த கடையில் சாப்பிட்டோம் இல்லையா அந்த மாதிரி சட்னி வை இந்த கடையில் சாப்பிட்ட மாதிரி சாம்பார் வை என்பது தான் நிறைய கணவன்மார்களோட புலம்பலா இருக்கும். அதை எல்லாம் தீர்த்து வைக்கிறதுக்கு தான் இப்போ நம்ம இந்த ரோட்டு கடை ஸ்டைல்ல அவிச்ச சட்னி வைக்க போறோம்.

இந்த சட்னி செய்யறதுக்கு நமக்கு நிறைய பொருட்கள் தேவை கிடையாது. ரொம்பவே சுலபமா வெறும் நாலே நாலு பொருட்களை வைத்து இந்த சட்னியை ரொம்பவே சுவையா செய்திடலாம். இந்த சட்னி மட்டும் நீங்க வீட்ல செய்தீங்க அப்படின்னா உங்க கைக்கு தங்க காப்பு கூட கிடைக்கலாம். வயிறு நிறைய நம்ம வீட்டில் உள்ளவங்க சாப்பிடறது நம்ம செய்து சாப்பாட்டுக்கான பெரிய பாராட்டா இருக்கும். அப்படி இந்த சட்னி செய்தீங்கன்னா உங்களுக்கு கிடைக்க போற பாராட்டு ரொம்பவே அதிகமா இருக்கும். சரி இப்படி சுவையான ரோட்டு கடை ஸ்டைல்ல சுவையான அவிச்ச சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
3.25 from 4 votes

ரோட்டு கடை அவிச்ச சட்னி | Road side shop chutney

சட்னியைகல் தோசைக்கெல்லாம் சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப வே சுவையா இருக்கும்.நம்ம பார்த்து பார்த்து எவ்வளவு பக்குவமா  வீட்டுலசட்னி செய்தாலும் அந்த சட்னி ரோட்டு கடைகளில் கிடைக்கிற சுவைல இருக்கிறதே கிடையாது. எப்பவும் வீட்ல இருக்கிறவங்க என்ன சொல்லுவாங்க அன்னைக்கு அந்த கடையில் சாப்பிட்டோம் இல்லையா அந்த மாதிரி சட்னி வை இந்த கடையில்சாப்பிட்ட மாதிரி சாம்பார் வை என்பது தான்நிறைய கணவன்மார்களோட புலம்பலா இருக்கும். அதை எல்லாம் தீர்த்து வைக்கிறதுக்கு தான் இப்போ நம்ம இந்த ரோட்டு கடை ஸ்டைல்ல அவிச்ச சட்னி வைக்க போறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: road side shop boiled chutney
Yield: 4
Calories: 140kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 காய்ந்த மிளகாய்
  • 7 பல் பல்பூண்டு
  • 3 தக்காளி
  • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் தக்காளியை நன்றாக கழுவி வைக்க வேண்டும். பூண்டை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் காய்ந்த மிளகாய், தக்காளி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • தக்காளி, காய்ந்த மிளகாய் வெந்தவுடன் அவற்றை நீரில் இருந்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.முழு தக்காளியாக வேக வைத்ததால் அரைப்பதற்கு முன்பு தக்காளிகளை லேசாக நறுக்கி விடவும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில்  வேகவைத்துள்ள காய்ந்த மிளகாய், தக்காளி உடன் பூண்டு , உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • கடுகு , சீரகம் பொரிந்த பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய, தக்காளி, பூண்டு கலவையை சேர்த்து நன்றாக கலந்து விடவும். லேசாக ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு சட்னியை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டால் ரோட்டுக்கடை ஸ்டைலில் அவிச்ச சட்டினி தயார் .
  • இந்த ரோட்டு கடை அவிச்ச சட்னி கல் தோசை, இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 140kcal | Carbohydrates: 1.8g | Protein: 3.9g | Saturated Fat: 0.6g | Sodium: 57mg | Potassium: 7mg | Fiber: 2.3g | Vitamin A: 22IU | Vitamin C: 16mg | Calcium: 1.4mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு இட்லி, தோசையுடன் தொட்டுக்க வாழைத்தண்டு சட்னி இப்படி செஞ்சி பாருங்க!