ரோட்டுகடை ஸ்டைலில் மசாலா பொரி வீட்டில் செய்து அசத்துங்கள்! மாலை நேரம் பக்காவான ஸ்நாக்ஸ்!

- Advertisement -

ரோட்டு கடைகளில் கிடைக்கிற மசாலா பொரி அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்ப ஒரு பிடித்தமான சிற்றுண்டியா இருக்கும். இந்த சிற்றுனுடைய பாக்கும்போதே வாங்கி சாப்பிடணும் அப்படிங்கற ஒரு ஆசை எல்லாரு மனசுலயும் தோணும். அப்படிப்பட்ட ஆசையைஎப்ப எல்லாம் தோணுதோ அப்ப எல்லாம் நிறைவேத்திக் கொள்வதற்காக நாமே நம்ம வீட்ல செய்து சாப்பிட்டுகலாம்ஶ்ரீ இந்த மசாலா பொரியை வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப சுலபமா செய்து சாப்பிட போறோம். இந்த மசாலா பொரி என்னதான் நம்ம  இந்த மாதிரி ஜன்க் ஃபுட்ஸ் சாப்பிடக்கூடாது அப்படின்னு ஒரு எண்ணம் வைத்திருந்தாலும் அந்த உணவை பார்க்கும் போது  சாப்பிட எண்ணம் தோன்றும்.

-விளம்பரம்-

விருப்பப்பட்ட உணவுகளை அளவுகளை கம்மியா  நாமே செய்து சாப்பிடும் பொழுது அது நமக்கு ஒரு நல்ல சந்தோஷத்தை கொடுக்கும். அப்படிங்கிற பட்சத்தில் இந்த மாதிரி மசாலா பொரிகளை வீட்டிலேயே செய்து சந்தோஷமா குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டோம்னா ரொம்ப நல்லா இருக்கும். அதுலயும் நம்ம குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஜன்க் ஐடம்ஸ் வீட்டில் பண்ணி கொடுக்கும் போது அவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

- Advertisement -

மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வந்த பிறகு குழந்தைகளுக்கு இந்த மாதிரி சாட் ஐட்டம்ஸ் வீட்லயே செய்து கொடுக்கும்போது அது ஒரு ஹெல்தி அப்படிங்கிறதும் நம்ம மனசுக்கு திருப்தியா இருக்கும். இந்த மசாலா பொரியல நம்ம கொஞ்சம் வெஜிடபிள்ஸ்சும் ஆட் பண்ணி அவர்களுக்கு செய்து கொடுக்கப்போறோம் . ஹெல்தியான மசாலா பொரியாக தான் இருக்க போகுது. வாங்க இந்த மசாலா பொரி எப்படி செய்வது அப்படிங்கறது பார்க்கலாம்.

Print
1 from 2 votes

மசாலா பொரி | Masala Pori Recipe In Tamil

மசாலா பொரியை வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப சுலபமா செய்து சாப்பிட போறோம். இந்த மசாலா பொரி என்னதான் நம்ம  இந்தமாதிரி ஜன்க் ஃபுட்ஸ் சாப்பிடக்கூடாது அப்படின்னு ஒரு எண்ணம் வைத்திருந்தாலும் அந்த உணவை பார்க்கும் போது  சாப்பிடஎண்ணம் தோன்றும். விருப்பப்பட்ட உணவுகளை அளவுகளை கம்மியா  நாமேசெய்து சாப்பிடும் பொழுது அது நமக்கு ஒரு நல்ல சந்தோஷத்தை கொடுக்கும். அப்படிங்கிற பட்சத்தில் இந்த மாதிரி மசாலா பொரிகளை வீட்டிலேயே செய்து சந்தோஷமா குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டோம்னா ரொம்ப நல்லா இருக்கும்.வாங்க இந்த மசாலா பொரி எப்படி செய்வது அப்படிங்கறது பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Masala Pori
Yield: 4
Calories: 162kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பொரி
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 கப் கேரட்
  • 1/2 கப் வெள்ளரிக்காய்
  • 12 கப் மிக்ஸ்ர்
  • 2 ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 2 ஸ்பூன் பச்சைமிளகாய் சாஸ்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி போன்றவைகளை பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் .
  • பிறகு அடுப்பில் ஒரு வானலியில் வைத்து அதில் எண்ணெய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சூடானதும் பொரியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • பொரி நன்றாக சூடாகி மஞ்சள்தூள் பொரிகளின் மீது பட்ட பிறகு அடுப்பை அணைத்துவிட்டவும்.
  • அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் ,தக்காளி , வெள்ளரிக்காய் கேரட் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • மிக்ஸ்ஸரை பொரியோடு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு பச்சைமிளகாய் சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கலந்து விட வேண்டும்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Fat: 7.7g | Cholesterol: 30mg | Sodium: 274mg | Potassium: 242mg