பொதுவாக சிவபெருமானை முழுமனதோடு மனதார பக்தியுடன் வழிபடுபவர்கள் தான் ருத்ராட்சையை அணிவார்கள். ருத்ராட்சையை அணிவதால் ஒருவரின் மனம் மற்றும் உடல் உறுதியாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும். ருத்ராட்சை சிவபெருமானுக்கு தொடர்புடையது என்பதால் எப்பொழுதுமே இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இத்தகைய தனிச்சிறப்புடைய ருத்ராட்சையை அணியும்போது நாம் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். இல்லை எனில் நாம் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும்.
ருத்ராட்சையின் சிறப்புகள்
ருத்ராட்சை இயற்கையாகவே ஆன்டிபயாட்டிக் தன்மையைக் கொண்டது அதனால் ருத்ராட்சை அணிவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அதிகரிக்கும். ருத்ராட்சியில் நேர்மறை ஆற்றல்கள் இருப்பதால் நம்மிடம் உள்ள எதிர்மறை ஆற்றலை அளித்து முழுவதுமாக நேர்மறை எண்ணங்களையும் நேர்மறை ஆற்றலையும் மட்டுமே நமக்கு அழிக்கும். இந்த நேர்மறை எண்ணங்களால் நம்முடைய முடிவுகள் மற்றும் செயலில் ஒரு விதமான தெளிவும் திருப்தியும் இருக்கும். ருத்ராட்சம் அணிவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ருத்ராட்சை அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்
பெரியம்மை காக்கா வலிப்பு கக்குவான் போன்ற வீரியம் வாய்ந்த அபாயமான நோய்களிலிருந்து நம்மை ருத்ராட்சை காப்போம். எனவே ருத்ராட்சையை அணிவது நமக்கு மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை தரும்.
ருத்ராட்சை அணிந்திருக்கும் போது செய்யக்கூடாதவைகள்
ருத்ராட்சம் மிகவும் தூய்மையானது எனவே அசைவம் உண்ணும் போது ருத்ராட்சத்தை கழற்றி வைக்க வேண்டும். ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு மது அருந்துதல் புகைப்பிடித்தல் புகையிலை போடுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. மீறி செய்தால் ருத்ராட்சம் தூய்மையற்றதாகிவிடும்.
ருத்ராட்சம் அணியக் கூடாத சில இடங்கள்
இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது ருத்ராட்சத்தை போடக்கூடாது மேலும் அவர்களை அடக்கம் செய்யும் இடத்திற்கும் ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு செல்லக்கூடாது.பிறந்த குழந்தையை பார்க்க போகும்போது ருத்ராட்சத்தை அணியக்கூடாதுபடுக்கை அறையில் ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு இருக்கக் கூடாது இரவு தூங்கும் முன்பு ருத்ராட்சத்தை கழற்றி வைக்க வேண்டும் அப்பொழுதுதான் இரவில் நல்ல தூக்கமும் நமக்கு கிடைக்கும்.
ருத்ராட்சையை அணிவதில் எழும் சந்தேகங்களுக்கான தீர்வு
பொதுவாக ஆண்கள் மட்டுமே அதிகமாக ருத்ராட்சியை அணிந்திருப்பார்கள் அதனால் பெண்கள் ருத்ராட்சையை அணியலாமா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் பெண்களின் ருத்ராட்சையை அணியலாம் மேலும் மாதவிடாய் நிகழும் போதும் இல்லறத்தில் ஈடுபடும் போதும் ருத்ராட்சையை அணியலாமா என்ற கேள்வி இருக்கிறது. அதற்கான பதில் என்னவென்றால் இந்த நிகழ்வுகள் இயற்கையாக நடப்பதால் அந்த நேரத்தில் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
ருத்ராட்சம் அணிய வேண்டிய கயிற்றின் நிறம்
ருத்ராட்சத்தை கருப்பு கயிற்றில் போட்டு அணியக் கூடாது. சிவப்பு மஞ்சள் மற்றும் வெள்ளை போன்ற நிறங்களில் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : கனவில் சிவபெருமான் வந்தால் அதற்கான காரணம் தெரியுமா ? அதனால் நமக்கு கிடைக்கப் போகும் பலன்கள் என்னென்ன?