மொறு மொறுனு ஸ்நாக்ஸாக ஜவ்வரிசி வடை இப்படி செய்து பாருங்க ஒரு வடை கூட மிச்சமாகாது!

- Advertisement -

மாலை நேரமானாலும் சரி குளிர்காலம் ஆனாலும் சரி ஈவினிங் டீயுடன் சேர்த்து சாப்பிட ஏதாவது கரம்புற என்று இருக்கும் வீட்டில் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான். அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான ஜவ்வரிசி வடையை  கிறிஸ்ப்பியா ஹோட்டல் ஸ்டைல்ல எப்படி செய்யறது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம் வாங்க.  

-விளம்பரம்-

இந்த வடைகளில் எத்தனையோ வகைகள் இருக்கிறது. மசால் வடை, மெதுவடை,வாழைப்பூ வடை இப்போதெல்லாம் இன்னும் பல விதமான வடைகள் கூட வந்து விட்டது. அந்த வகையில்  சமையல் இந்த குறிப்பு பகுதியில் பருப்பை சேர்க்காமல் ஒரு சூப்பரான ஜவ்வரிசி வடை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.ஸ்னாக்ஸ் செய்வது என்றாலே கூடுதல் வேலை இருக்குமே என்ற பயம் நிறைய பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் இதற்கு மாறாக வெங்காயம் கூட அறியாமல் சட்டென செய்துவிடும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

- Advertisement -
Print
3 from 1 vote

ஜவ்வரிசி வடை | Sabudana Vada Recipe In Tamil

இந்த வடைகளில் எத்தனையோ வகைகள் இருக்கிறது. மசால் வடை, மெதுவடை,வாழைப்பூ வடை இப்போதெல்லாம் இன்னும்பல விதமான வடைகள் கூட வந்து விட்டது. அந்த வகையில்  சமையல் இந்த குறிப்புபகுதியில் பருப்பை சேர்க்காமல் ஒரு சூப்பரான ஜவ்வரிசி வடை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.ஸ்னாக்ஸ்செய்வது என்றாலே கூடுதல் வேலை இருக்குமே என்ற பயம் நிறைய பெண்களுக்கு இருக்கிறது. ஆனால்இதற்கு மாறாக வெங்காயம் கூட அறியாமல் சட்டென செய்துவிடும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time10 minutes
Active Time5 minutes
Course: snacks
Cuisine: mumbai, tamilnadu
Keyword: Sanudana Vada
Yield: 4
Calories: 350kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் ஜவ்வரிசி
  • 1 உருளைக்கிழங்கு
  • 2 தேக்கரண்டி அரிசி மாவு
  • 1 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி இஞ்சி
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 தேக்கரண்டி உப்பு
  • எண்ணெய் தேவையானஅளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5-6 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கைவேக வைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியை தண்ணீரில்லாமல் சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியில் தண்ணீர் அதிகம் இருந்தால் வடையில் எண்ணெய் அதிகமாக இருக்கும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • ஜவ்வரிசியுடன் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்க்கவும்.எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக சேரும்படி நன்கு பிசைந்துக் கொள்ளவும்
  • ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் பொரிந்து வெந்ததும் எடுத்து விடவும்.
  • சுவையான கிரிஸ்பியான ஜவ்வரிசி வடை தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 5mg | Fiber: 3g | Calcium: 20mg