Home சைவம் சைதாப்பேட்டை வடகறி அருமையான சுவையில் இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவான ஒரு...

சைதாப்பேட்டை வடகறி அருமையான சுவையில் இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவான ஒரு ரெசிபி!

இட்லி தோசை இதுக்கெல்லாம் சூப்பரான சைடு டிஷ் அப்படின்னு சொன்னா வடகறி அதுலயும் ரொம்ப ஸ்பெஷலா இடியாப்பத்துக்கும் இந்த வடகறிக்கும் ரொம்பவே சூப்பர் காம்பினேஷனா இருக்கும்.  இந்த வடகறிய விரும்பாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த மாதிரியான வடகறி கண்டிப்பா மிஸ் பண்ணாம எல்லாரும் சாப்பிடுவாங்க . அதுவும் எந்த இடத்துல ஃபேமஸா இருக்கோ அந்த இடத்துக்கு போனா கண்டிப்பாக சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

அப்படி ரொம்பவே ஃபேமஸா வடகறிக்கு இருக்கிற இடம் அப்படின்னு பாத்தீங்கன்னா அது சைதாப்பேட்டை தான். இந்த வடகறி சைதாப்பேட்டைல எப்படி செய்வாங்களோ அதே மாதிரி சுவையில் நம்ம இப்போ இந்த வடகறி. செய்ய போறோம். இந்த வடகறி செய்வது ரொம்பவே சுலபம் அப்படின்னு சொல்லலாம் இருந்தாலும் இந்த கடலை பருப்பு ரெடி பண்றதுக்கு மட்டும் ஊற வைக்கிறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும் மத்தபடி இந்த வடகறி செய்வது ரொம்பவே சுலபம்.

ரொம்பவே ஈஸியா அதிகமான மசாலாக்களை சேர்க்காமல் வேற எந்த பொருட்களும் தேவைப்படாது ரொம்ப டேஸ்ட்டா சுலபமா இதை செய்து முடித்து விடலாம். கண்டிப்பா சைதாப்பேட்டையில் செய்யற மாதிரி சுவையான வடகறி  வீட்டில் செய்து கொடுத்தால்  எப்படி இருக்கும். சைதாப்பேட்டையில் ரொம்ப ஃபேமஸான உணவு வடகறி. சைதாப்பேட்டையில் செய்ற மாதிரியான சுவையான இந்த வடகறியை எப்படி நம்ம வீட்ல செஞ்சு அசத்தலான்னு பாருங்க. வடகறி எல்லாருக்கும் பிடிக்கும் ரொம்ப சுலபமா வீட்ல இருக்க பொருட்களை வைத்து ரொம்ப ஈஸியா சீக்கிரமா செய்திடலாம். அந்த மாதிரி சைதாப்பேட்டையில் ஃபேமஸான  இந்த வடகறி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Print
5 from 1 vote

சைதாப்பேட்டை வடகறி | Saidapet Vadacurry Recipe In Tamil

வடகறிய விரும்பாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த மாதிரியான வடகறி கண்டிப்பா மிஸ் பண்ணாம எல்லாரும் சாப்பிடுவாங்க . அதுவும் எந்த இடத்துல ஃபேமஸா இருக்கோ அந்த இடத்துக்கு போனா கண்டிப்பாக சாப்பிடுவாங்க. ரொம்பவே ஈஸியா அதிகமான மசாலாக்களை சேர்க்காமல் வேற எந்த பொருட்களும் தேவைப்படாது ரொம்ப டேஸ்ட்டா சுலபமா இதை செய்து முடித்து விடலாம். வடகறி எல்லாருக்கும் பிடிக்கும் ரொம்ப சுலபமா வீட்ல இருக்க பொருட்களை வைத்து ரொம்ப ஈஸியா சீக்கிரமா செய்திடலாம். அந்த மாதிரி சைதாப்பேட்டையில் ஃபேமஸான  இந்தவடகறி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Saidapet Vadacurry
Yield: 4
Calories: 190kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1 வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/4 ஸ்பூன் கரமசாலா
  • 1/4 ஸ்பூன் சோம்புதூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 ஸ்பூன் நெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு மணி நேரம் ஊற வைத்து கடலைபருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
     
  • பிறகு அந்தக் கடலைப்பருப்பு மாவில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
     
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலைப்பருப்பை குட்டி குட்டி பகொடாக்கள் போல் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  • எண்ணெய் சூடாகி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள கடலை பருப்பு மாவை சிறிது சிறிதாக எண்ணெயில் ஊதறி விட வேண்டும். எண்ணெயில் உதறிவிட்ட கடலை பருப்பு மாவை நன்றாக திருப்பி போட்டு வெந்த பிறகு எடுக்க வேண்டும். ஆனால் சிவக்க விடக்கூடாது.
     
  • பிறகு ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
     
  •  பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளிப் பழத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
  • பிறகு மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்புத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

Nutrition

Serving: 300g | Calories: 190kcal | Carbohydrates: 5.9g | Protein: 14.2g | Fat: 0.2g | Sodium: 4mg | Fiber: 15.4g | Vitamin C: 13.5mg | Iron: 0.9mg

இதையும் படியுங்கள் : வேர்கடலை தக்காளி சட்னி ரோட்டு கடை ஸ்டைலில் இந்த சட்னிக்கு 2 சட்டி இட்லி அவித்தால் கூட பத்தாது!