Advertisement
ஆன்மிகம்

ஜூன் 30 2024 அன்று நடக்கவிருக்கும் சனி வக்ர பெயர்ச்சியால் வாழ்க்கையில் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கப்போகிற ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

Advertisement

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது. ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஜூன் கடைசி முதல் முதல் வக்ரகதியில் பயணம் செய்யப்போகிறார். மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் தனது சொந்த ராசியில் இருப்பதால் ஷஷ ராஜயோக, கேந்திர திரிகோண ராஜயோகம் ஆகிய யோகங்கள் உருவாகியுள்ளன. சனி பகவான் ஜூன் 30 அதிகாலை வக்கிரப் பெயர்ச்சி அடைய உள்ளார்.

அவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். சனி பகவானின் வக்ர பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாக உள்ளது. சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இந்த வக்ர பெயர்ச்சியால் யாருடைய வாழ்க்கையில் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கப்போகிறது என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

வக்ர பெயர்ச்சி என்றால்

அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இவர்தான் இந்த முறை வக்கிர பெயர்ச்சி அடைய போகிறார். கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.

ரிஷபம்

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் தற்போது கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சனி மூலம் உங்களுக்கு திருமண வாய்ப்புகள் கிடைக்கும். பல நாட்களாக நடக்காமல் இருந்த திருமணம் கைகூடும் வாய்ப்புகள் உள்ளன. முதலீடுகளை செய்ய இது ஏற்ற நேரமாக இருக்கும். அதிகாரிகள் உங்கள் பணியால் மகிழ்ச்சி அடைவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உங்களின் உறவு, இணக்கமான சூழ்நிலை சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். பழைய

Advertisement
நண்பர்களை சந்திப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும். உத்தியோகத்தில் நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களுக்கு இந்த காலத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்

சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். நீண்ட நாட்களாக

Advertisement
தடைபட்டிருந்த பல பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும். திட்டமிட்ட பணிகளில் நல்ல முன்னேற்றமும், அதன் மூலம் வருவாயும் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

கன்னி

சனி வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனமாக முடிவு எடுக்கவும். முடிந்தவரை கிடைக்கும் லாபத்தை சேமித்து வைப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் உங்களின் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

சனியின் அருளை‌ பெற

சனியின் அருள் இருந்தால் பரம ஏழையாக இருப்பவர் கூட நாடாளும் அரசனாக முடியும். அதனால் சனிக்கிழமை அதிகாலையில் பிச்சைக்காரர்களை எதிரில் பார்த்து அவர் ஏதாவது கேட்டால் அவர்களுக்கு உதவுங்கள். அவர்களுக்கு தாராளமாக பணம், உணவு போன்ற உபச்சாரங்களை செய்யுங்கள். இதனால் சனி பகவான் உங்கள் மீது கருணை கொள்வார். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு ஒரு சிறு துணியில் எள் முடிந்து, அதை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி, அர்ச்சனைகள் செய்து வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி நன்மையான பலன்களை தரும்.

இதனையும் படியுங்கள் : சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

தித்திக்கும் தினை அல்வா ஆரோக்கியமான முறையில் இப்படி செய்து பாருங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது!!!

பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஜூன் 2024!

மேஷம் இன்று உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டு திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். இன்று உங்களுக்கு…

12 மணி நேரங்கள் ago

வீட்டில் குடைமிளகாய் இருந்தால் வாங்கினால் இந்த குடைமிளகாய் மசாலா தோசை செய்து பாருங்கள் அட்டகாசமாக!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…

1 நாள் ago

வீடே மணக்கும் சுவையான திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா இப்படி செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!!

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில்…

3 நாட்கள் ago

தோசை, இட்லிக்கு இப்படி செட்டிநாடு ஸ்டைல் தக்காளி சட்னி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன்…

3 நாட்கள் ago

ஜூன் 27 புதன் உதயத்தால் கவலைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன் மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு…

4 நாட்கள் ago