Home ஆன்மிகம் சனிக்கிழமை இந்த உறவினர்கள் வீட்டுக்கு மட்டும் செல்ல கூடாதாம்! இந்த பொருள்களையும் வாங்க கூடாதாம்!

சனிக்கிழமை இந்த உறவினர்கள் வீட்டுக்கு மட்டும் செல்ல கூடாதாம்! இந்த பொருள்களையும் வாங்க கூடாதாம்!

நவக்கிரகங்களில் ஒருவராக இருக்கும் சனி பகவான் எப்பொழுதும் நமக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக ஒருபொழுதும் இருந்ததில்லை நாம் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்வதற்காக நமக்கு பல கஷ்டங்களை கொடுக்கக்கூடிய ஒரு தெய்வமாகத்தான் காட்சியளிக்கிறார். அதனால் சனி பகவானே பலரும் ஒரு நீதி தவறாக நீதிமான் என்று கூறுவார்கள். சனி பகவானின் தண்டனையிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது அவர் நினைப்பதுதான் தீர்ப்பு அப்படிப்பட்ட சனி பகவானுக்கு உகந்த நாள் தான் சனிக்கிழமை இந்த நாட்களில் நாம் ஒரு சில காரியங்களை செய்யாமல் இருப்பதே நல்லது அதையும் மீறி நாம் சனிக்கிழமையில் ஒரு சில காரியத்தை செய்யும்போது அதனால் நமக்கு துரதிஷ்டம் கூட ஏற்படும் அது என்னென்ன என்பதை இநனத ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இந்த திசையில் பயணம் செய்யக் கூடாது

சனிக்கிழமை என்று ஒரு சில திசையில் பயணம் செல்லக்கூடாது என்று சாஸ்திர சம்பிரதாயங்கள் கூறுகின்றனர் அதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் சனிக்கிழமை பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளலாம். அதையும் மீறி பயணம் அவசியம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக சிறிது இஞ்சி சாப்பிட்டுவிட்டு நீங்கள் எந்த திசையில் பயணம் செல்ல போகிறீர்களோ அதற்கு எதிர் திசையில் 5 அடி நடந்து விட்டு அதன் பின்பு நீங்கள் செல்ல வேண்டிய திசையில் பயணத்தை மேற்கொள்ளலாம்.

கணவர் வழி உறவினர்கள்

வீட்டு பெண்கள் கனவர் வழி சொந்தகாரர்களின் வீடுகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாகவே ஒரு குடும்பத்தில் மனைவி என்று இருந்தால் அவர்கள் மாமியாருக்கும் கணவனின் உடன் பிறந்த நாத்தனார் அவர்களுக்கும் இடையே ஒருபொழுதும் ஒத்துப் போவதில்லை அடிக்கடி ஏதாவது தகராறு ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். இந்த நிலையில் சனிக்கிழமை என்று கணவன் வழி சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்லாமல் சொந்தங்களுக்கு இடையே வரும் தேவையில்லா சண்டைகளில் இருந்து விடுபடலாம்.

வாங்க கூடாத பொருட்கள்

சனிக்கிழமை அன்று எண்ணெய் மற்றும் எண்ணெய் சம்பந்தமான பொருள்களை வாங்குவதால் நம்முடைய கடன் சுமை அதிகரிக்கும் அதேபோல் தோல் சார்ந்த பொருட்களை வாங்கினாலும் நம் கடன் சுமை அதிகரிக்கும். மேலும் உப்பு, மரக்கட்டை, இரும்பு சம்பந்தமான பொருள்களையும் சனிக்கிழமைகளில் வாங்காமல் இருப்பதே நமக்கு நல்லது இது போன்ற பொருட்களை நாம் வாங்கும் போது துரதிஷ்டம் சேர்ந்து நம்முடன் வரும்.

சாப்பிட கூடாத உணவுகள்

சனிக்கிழமைகளில் சில உணவுகளை நாம் தவிர்ப்பது மிகவும் நல்லது அந்த வகையில் சனிக்கிழமை பால் மற்றும் பால் சம்பந்தமான பொருட்களையும் அதனுடன் சிவப்பு மிளகு, மாங்காய் ஊறுகாய் மற்றும் கத்திரிக்காய் போன்ற பொருட்களையும் தவித்து விடலாம். அதையும் மீறி பால் சம்பந்தமான உணவுகளை சாப்பிட வேண்டிய நிலை இருந்தால் அதனுடன் மஞ்சள் அல்லது நாட்டு சக்கரை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள் அதேபோல் குடிப்பழக்கம் சனிக்கிழமை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் இதனால் நமக்கு பல பிரச்சனைகள் வரும்.

-விளம்பரம்-