பார்தாலே நாவில் எச்சி ஊறும் ருசியான சவுராஷ்டிரா பூண்டு கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

பூண்டு கிரேவி யாருக்கு பிடிக்காமல் போகும்? சூடான சாதம் பூண்டு கிரேவி, அப்பளம் நல்ல காம்பினேசன். பூண்டு கிரேவி தயாரிக்கும் வகைகள் நிறைய இருக்கின்றன. அதில், சவுராஷ்டிரா ஸ்டைலில் பூண்டு கிரேவியும் ஒன்று. சமையலறையில் முக்கியமாக பொருளாக வலம்வரும் பூண்டு பல நன்மைகளை அளிக்கின்றது. பூண்டை வறுத்து, சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள்.

-விளம்பரம்-

அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும் கூட. இந்த பூண்டு கிரேவி உடல் உபாதைகள் மற்றும் வயிற்று பிரச்சனைக்கு தீர்வு தரும் மருத்துவ குணமிக்க ஒரு உணவாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்தப் பூண்டு மிக முக்கியம். இவ்வாறு பல வழிகளில் நன்மையை அளிக்கும் பூண்டு கிரேவி வைத்து சாப்பிடுவது தனி ருசி. இரண்டு மூன்று நாட்கள் வரை இன்றும் கிராம மக்கள் சுண்ட வைத்து சாப்பிடுவதை நாம் பார்க்க முடிகின்றது. உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லை என்றால் கவலையை விடுங்கள்.

- Advertisement -

சுவையான மற்றும் டேஸ்டியான இந்த கிரேவி தயார் செய்ய வெறும் பூண்டு மட்டும் இருந்தால் போதும். இவற்றைக் கொண்டு எளிமையான முறையில் கிரேவி செய்து அசத்தலாம். அதிலும் இந்த கிரேவியை நல்லெண்ணெய் பயன்படுத்தி தயார் செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

Print
3.50 from 2 votes

சவுராஷ்டிரா பூண்டு கிரேவி | Saurashtra Garlic Gravy Recipe In Tamil

பூண்டு கிரேவி யாருக்கு பிடிக்காமல் போகும்? சூடான சாதம் பூண்டு கிரேவி, அப்பளம் நல்ல காம்பினேசன். பூண்டு கிரேவி தயாரிக்கும் வகைகள் நிறைய இருக்கின்றன. அதில், சவுராஷ்டிரா ஸ்டைலில் பூண்டு கிரேவியும் ஒன்று. சமையலறையில் முக்கியமாக பொருளாக வலம்வரும் பூண்டு பல நன்மைகளை அளிக்கின்றது. பூண்டை வறுத்து, சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள். அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும் கூட. இந்த பூண்டு கிரேவி உடல் உபாதைகள் மற்றும் வயிற்று பிரச்சனைக்கு தீர்வு தரும் மருத்துவ குணமிக்க ஒரு உணவாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்தப் பூண்டு மிக முக்கியம். இவ்வாறு பல வழிகளில் நன்மையை அளிக்கும் பூண்டு கிரேவி வைத்து சாப்பிடுவது தனி ருசி.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: garlic gravy
Yield: 4 People
Calories: 149kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 1/2 கப் பூண்டு
  • 1/4 கப் கடலை மாவு
  • 1/2 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு மிக்சியில் பூண்டு பற்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் கடலைமாவை தண்ணீர் ஊற்றி கரைத்து, அதனுடன் தயிரை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து அரைத்த பூண்டை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
  • அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • பின்னர் நாம் கரைத்து வைத்துள்ள கடலைமாவு தயிரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான பூண்டு கிரேவி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 149kcal | Carbohydrates: 3.3g | Protein: 6.4g | Fat: 0.5g | Saturated Fat: 0.1g | Potassium: 401mg | Fiber: 0.1g | Vitamin C: 31.2mg | Calcium: 181mg | Iron: 1.7mg

இதனையும் படியுங்கள் : ருசியான வெந்தயக் கீரை கிரேவி இப்படி செஞ்சு பாருங்க! குக்கரில் 1 விசில் வந்தால் போதும். ஆளை தூக்கும் வாசத்தில் அசத்தலான கிரேவி ரெடி உடனே ரெடி!