மரணம் பற்றி சிவப்புராணம் என்னென் சொல்கிறது என்று தெரியுமா? சிவபுராணத்தின் முக்கியதுவம் என்ன?

- Advertisement -

இந்த உலகத்தை பொறுத்தவரையில் பிறப்பும் இறப்பும் இயற்கையானது இது இரண்டையுமே யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. பிறப்பு என்று ஒன்று இருக்கிறது என்றால் இறப்பும் நிச்சயமாக இருக்கும். ஒரு சிலர் நாம் இறந்து விடுவோமோ என்று நினைத்து பயந்து கொண்டே இருப்பார்கள் ஆனால் ஒரு சிலர் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பக்குவத்தில் இருப்பார்கள். நாம் இறந்து விட்டால் நம் குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வார்கள் நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்மை நினைத்து வருந்துவார்களா என்ற நினைப்பு எல்லாம் அனைவருக்கும் இருக்கும். மனிதர்களை அதிகமாக பயப்பட வைப்பது இந்த மரணம் மட்டுமே.

-விளம்பரம்-

இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நிச்சயமாக ஒரு ஆள் மரணத்தை நெருங்கியே ஆக வேண்டும். அதனை யார் நினைத்தாலும் மாற்றவே முடியாது ஆனால் நாம் இறக்கப் போவதற்கு முன்னால் நாம் இறந்து போவதற்கான சில அறிகுறிகள் நமக்கு முன்கூட்டியே உணர்த்தப்படும் என்று சொல்கிறது சிவபுராணம். ஆனால் அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கிறது சிவபுராணம். ஒரு சில அறிகுறிகள் நமக்கு இறக்கப் போவதை உணர்த்தும் என்று சில புராணம் சொல்வதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

சிவபுராணத்தின் முக்கியத்துவம்

இந்துக்களின் புராணங்களில் மிகச்சிறப்பான புனிதமான ஒன்றான சிவப்பு கானத்தில் சிவபெருமானின் கடமைகளையும் குணங்களையும் பண்புகளையும் கருணையையும் சிவபெருமானின் அருளை எப்படி பெற வேண்டும் என்பதை பற்றியும் இந்த சிவபுராணம் விளக்குகிறது. ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை அவர்களின் இயக்கத்தை பற்றியும் இந்த சிவபுராணம் விளக்குகிறது. மேலும் ஒருவர் இறப்பதற்கு முன்பாக அவர்களுக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் காட்டும் என்பதை பற்றியும் சிவபுராணம் விளக்குகிறது அந்த அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.

இறக்கப் போவதற்கு முன்பாக சிவபுராணம் உணர்த்தும் ஐந்து அறிகுறிகள்

நம் உடம்பில் ஐம்புலன்களின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கினால் ஒரு சில வாரங்களிலேயே நாம் இறக்கப் போவதாக அர்த்தம் என்று சிவபுராணம் சொல்கிறது

நீர் எண்ணெய் கண்ணாடி மற்றும் நெய் போன்றவற்றில் முகத்தை பார்க்கும் போது நம் முகம் தெரியாமல் இருந்தால் அவர்களுக்கு மரணம் நெருங்கப் போகிறது என்று அர்த்தம்.

-விளம்பரம்-

உடலில் வெளிர் அல்லது மஞ்சள் நிறத்தில் தழும்புகள் ஆங்காங்கே ஏற்பட்டால் அவர்கள் மரணத்தை நெருங்கப் போகிறார்கள் என்று சிவபுராணம் சொல்கிறது

ஒருவருக்கு இடது கை அல்லது இடது பாதத்தில் துடிப்பு மற்றும் வாயின் மேல் பகுதியில் வறட்சி போன்றவை ஏற்பட்டால் அவர்கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சிவபுராணம் விளக்குகிறது

யார் ஒருவருக்கு சந்திரனையும் சூரியனையும் சுற்றி கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் வெளிவட்டம் தெரிகிறதோ அவர்களுக்கு மரணம் விரைவில் வரப்போவதாக சிவபுராணம் சொல்கிறது.

-விளம்பரம்-