Home ஸ்வீட்ஸ் தித்திக்கும் சுவையில் சூப்பரான சீம்பால் அல்வா ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

தித்திக்கும் சுவையில் சூப்பரான சீம்பால் அல்வா ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் அல்வா விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். சீம்பால் சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக சீம்பாலைக் கொண்டு அல்வா தயாரித்தால், அதன் சுவை இன்றும் அலாதியாக இருக்கும். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். கிராமப்புறங்களில் மாடு, கண்ணு போட்ட பிறகு சீம்பால் கிடைக்கும். அதை வாங்கி சர்க்கரை ஏலக்காய் போட்டு கடும் பால் செய்து ருசியாக சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

பெரும்பாலும் இன்று நகர்ப்புறங்களில் இந்த சீம்பால் கிடைக்கவில்லை. ஆனால் எப்போதாவது இந்த சீம்பால் கிடைத்தால் அதை வைத்து சுவையான சீம்பால் அல்வா செய்து பாருங்கள். இதில் கொழுப்பு சத்து குறைவாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த பால், காய்ச்சி பருகுவதற்கு, காபி அல்லது டீயில் கலப்பதற்கு ஏற்ற பால் இல்லை, இந்தப் பாலை காய்ச்சினாலே, பால் முறிந்துவிடும். எனவேதான், இதை சீம்பாலில் ஒரு சுவைமிக்க இனிப்பை தயார் செய்து அந்த வீட்டு குழந்தைகளுக்கு கொடுப்பர். குழந்தைகள் என்றில்லை, வீட்டில் உள்ள பெரிய குழந்தைகளும் ஆர்வமாக சாப்பிடும் ஒரு சுவைமிக்க இனிப்பும் கூட, இந்த சீம்பால் அல்வா. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கி, உண்ட உணவின் அஜீரணக் கோளாறுகளை நீக்கும் தன்மை மிக்கது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சீம்பாலில் எப்படி சுவையான அல்வா செய்வதென்று இந்த பதிவில்‌ பார்க்கலாம்.

Print
5 from 1 vote

சீம்பால் அல்வா | Seempal Halwa Recipe In Tamil

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் அல்வா விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். சீம்பால் சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக சீம்பாலைக் கொண்டு அல்வா தயாரித்தால், அதன் சுவை இன்றும் அலாதியாக இருக்கும். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இதில் கொழுப்பு சத்து குறைவாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த பால், காய்ச்சி பருகுவதற்கு, காபி அல்லது டீயில் கலப்பதற்கு ஏற்ற பால் இல்லை, இந்தப் பாலை காய்ச்சினாலே, பால் முறிந்துவிடும். எனவேதான், இதை சீம்பாலில் ஒரு சுவைமிக்க இனிப்பை தயார் செய்து அந்த வீட்டு குழந்தைகளுக்கு கொடுப்பர்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Seempal Halwa
Yield: 3 People
Calories: 202kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 லி சீம்பால்
  • 300 மிலி நெய்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/4 கப் முந்திரி
  • 1/2 கப் சர்க்கரை

செய்முறை

  • முதலில் சீம்பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 20 நிமிடங்கள் வரை அடுப்பில் வைக்கவும். இந்த பால் கொஞ்சம் திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே நெய்யில் சீம்பால் சேர்த்து நன்கு கிளறவும். தண்ணீர் நன்கு வற்றி திரண்டு வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான சீம்பால் அல்வா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 202kcal | Carbohydrates: 3.7g | Protein: 5.94g | Fat: 9.3g | Saturated Fat: 6.03g | Sodium: 36mg | Potassium: 349mg | Fiber: 1.2g | Sugar: 4g | Vitamin A: 120IU | Calcium: 276mg | Iron: 24mg

இதனையும் படியுங்கள் : பால் கடம்பு இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!