சேப்பங்கிழங்கு சுக்கா மதிய உணவுக்கு இப்படி மட்டும் ஒரு தடவை செஞ்சி பாருங்க! இனி அடிக்கடி உங்க வீட்ல செய்வீங்க!

- Advertisement -

ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு சாம்பார் வைத்தால் அதிகப்படியாக காரமான பொரியல் வகைகளை தான் செய்கிறோம். அதேபோல் காரக்குழம்பு அல்லது குருமா குழம்பு செய்து விட்டால் குறைவான காரம் சேர்க்கும் பொரியல் வகையை சமைத்து வைக்கின்றோம். அவ்வாறு மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஒரு அருமையான சேப்பங்கிழங்கு சுக்கா செய்தால் மட்டும் போதும். இதை செய்து விட்டால் எல்லா வகை குழம்புக்கும் ஏற்ற உணவாக இருக்கும். அல்லது பதார்த்தம் வைக்க வேண்டிய அவசியம் என்று எதுவும் கிடைக்காது. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும். சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் குடல் புண்கள் விரைவில் குணமாகும்

- Advertisement -

சேப்பங்கிழங்கு சுக்கா அதன் பிறகு இப்படி மசாலாக்கள் போட்டு சமைத்து கோடுத்து பாருங்கள், எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற கலவை சாதத்திற்கு இந்த சேப்பங்கிழங்கு சுக்கா செமையாக இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

Print
No ratings yet

சேப்பங்கிழங்கு சுக்கா | Seppankizhangu Chukka

 
ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமானஒன்றாக இருக்கிறது. அவ்வாறு சாம்பார் வைத்தால் அதிகப்படியாக காரமான பொரியல் வகைகளைதான் செய்கிறோம். அதேபோல் காரக்குழம்பு அல்லது குருமா குழம்பு செய்து விட்டால் குறைவானகாரம் சேர்க்கும் பொரியல் வகையை சமைத்து வைக்கின்றோம். அவ்வாறு மதிய உணவுடன் சேர்த்துசாப்பிட ஒரு அருமையான சேப்பங்கிழங்கு சுக்கா செய்தால் மட்டும் போதும். இதை செய்து விட்டால்எல்லா வகை குழம்புக்கும் ஏற்ற உணவாக இருக்கும். அல்லது பதார்த்தம் வைக்க வேண்டிய அவசியம்என்று எதுவும் கிடைக்காது. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாகஇருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry, LUNCH, Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Seppankizhangu chukka
Calories: 162kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • சேப்பங்கிழங்கு
  • வெங்காயம்
  • பூண்டு
  • இஞ்சி
  • கறிவேப்பிலை
  • பச்சை மிளகாய்
  • சாம்பார் பொடி
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • கரம் மசாலா தூள்

தாளிக்க

  • கடுகு,சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
  • 2 எண்ணெய் எண்ணெய்

செய்முறை

  • வெங்காயம்,கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை ஒன்று போல் நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும்.
     
  • சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
     
  • வதங்கியதும் தீயை குறைத்து வைத்து உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு வேக வைத்து நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து கிழங்குடன் மசாலா சேரும்படி நன்கு பிரட்டிவிடவும்.
  • 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு முறை பிரட்டிவிட்டு இறக்கவும்.
  • சுவையான சேப்பங்கிழங்கு சுக்கா தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 162kcal | Carbohydrates: 37g | Protein: 3.6g | Fat: 0.1g | Sodium: 121.4mg | Potassium: 670mg | Fiber: 3.9g | Vitamin C: 28.6mg | Calcium: 14mg | Iron: 4.3mg