ருசியான எள்ளு சட்னி இப்படி அரைச்சு பாருங்க. இட்லி, தோசை, பொங்கல் உடன் தொட்டுக்கொள்ள அட்டகாசமாக இருக்கும்!

- Advertisement -

ஒரு ருசியான மற்றும் எளிதில் செய்யக்கூடிய சட்னி. இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் பரிமாறவும். ஒரு சிறந்த புரதம் நிறைந்த உணவு இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் சாப்பிட, தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு எள்ளு சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இந்த  பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எள்ளை சேர்த்து இந்த சட்னி மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். இந்த சூப்பர் ரெசிபியை இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

-விளம்பரம்-
Print
3 from 2 votes

எள்ளு சட்னி | Sesame Chutney Recipe In Tamil

ஒரு ருசியான மற்றும் எளிதில் செய்யக் கூடிய சட்னி. இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் பரிமாறவும்.ஒரு சிறந்த புரதம் நிறைந்த உணவு இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் சாப்பிட, தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு எள்ளு சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இந்த  பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எள்ளை சேர்த்து இந்த சட்னி மிக மிக சுலபமாக 10 நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். இந்த சூப்பர் ரெசிபியை இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, chutney
Cuisine: tamilnadu
Keyword: Sesame Chutney
Yield: 4
Calories: 29kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 டீஸ்பூன் எள்ளு லேசாக வறுத்தது
  • 1/2 கப் வறுத்த வேர்க்கடலை
  • 3 வறுத்த காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 சிறு துண்டு புளி
  • உப்பு தேவைகேற்ப
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • எள்ளு,வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • கடாயில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

Nutrition

Serving: 50g | Calories: 29kcal | Protein: 0.8g | Fat: 2.3g | Fiber: 0.8g | Vitamin A: 2.6IU | Calcium: 62.3mg | Iron: 0.4mg
- Advertisement -