எள்ளு சேர்த்து செய்ய படும் அனைத்து உணவும் மிகுந்த வாசமுடன் இருக்கும்.. “இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத் தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழிக்கேற்ற எள்ளில் மிகுதியான ஆரோக்கியம் உள்ளது. எள்ளு சேர்த்து செய்யப்படும் எள்ளு கத்திரிக்காய், முறுக்கு, அதிரசம் போன்ற, சைவ உணவே அவ்வளவு ருசியாக இருக்கும் எனும் போது. எள்ளு அசைவத்தில் சேர்த்து செய்தால் இன்னும் அதித சுவையும் மணமுடன் இருக்கும். இந்த எள்ளு மட்டன் ஃப்ரை வித்தியாசமான செய்தால்.. எப்போதும் மட்டும் குழம்பு செய்யாமல் இந்த முறையில் எள்ளு சேர்த்து செய்வீர்கள்.
எள் இறால் ஃப்ரை வித்தியாசமானது, மற்ற இறால் ரெசிபிகளை மிஞ்சும் அளவுக்கு ருசி அதிகமாக இருக்கும்.எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.
இந்த எள்ளு எந்த உணவோடு சேரும் போதும், உணவுற்குள் சேர்ந்து சுவையை கூடும். இந்த எள்ளு இறாலுடன் சேர்த்து செய்யும் பொழுது சிறப்பான ருசியை அளிக்கும். வாங்க இந்த ருசியான எள்ளு இறால் ஃப்ரை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
எள்ளு இறால் ஃப்ரை | Sesame Prawn Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- இறால்
முதல் கலவை:
- இஞ்சி விழுது
- பூண்டு விழுது
- எலுமிச்சை சாறு
- மிளகாய்த் தூள்
- வெள்ளை (அ) கறுப்பு மிளகு தூள்
- உப்பு
இரண்டாவது கலவை:
- கெட்டி தயிர்
- க்ரீம்
- ஏலக்காய் தூள்
- கடலை மாவு
மேல் மாவு:
- ப்ரெட் க்ரம்ப்ஸ்
- வெள்ளை (அ) கறுப்பு எள்ளு
செய்முறை
- இறாலை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும.
- எலுமிச்சை சாறில் இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், வெள்ளை (அ) கறுப்பு மிளகுதூள், உப்பு ஆகியவற்றை கலந்து அதில் சுத்தம் செய்த இறாலை போட்டு பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய இறாலை எடுத்து நீர் இல்லாமல் வடித்து இரண்டாம் கலவையான கெட்டி தயிர், க்ரீம், ஏலக்காய் தூள், கடலை மாவு கலவையில் போட்டு 40 நிமிடம் ஊற வைக்கவும்
- ப்ரெட்க்ரம்ப்ஸ், எள்ளு இரண்டையும் ஒரு தட்டில் கலந்து அதில் ஊற வைத்த இறாலை பிரட்டி ஃப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.
- சுவையான எள்ளு ப்ரான் ஃப்ரை