ஒரு சிலருக்கு ஆட்டு ஈரல் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் ஆட்டுக்கறி என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டில் உள்ள அனைத்து பாகங்களுமே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது அதிலும் ஆட்டு ஈரல் நம் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த ஆட்டு ஈரலை நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் ரத்தம் கம்மியாக இருப்பவர்கள் இந்த ஆட்டு ஈரலை சாப்பிட்டு வந்தால் அவர்களது உடலில் ரத்தம் அதிகரிக்கும்.
பொதுவாக கர்ப்பிணி பெண்கள் ஆட்டு இருளை சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஆட்டு ஈரலை வைத்து நிறைய ரெசிபிஸ் நம்மால் செய்ய முடியும். ஆனால் விரைவில் செய்யக்கூடிய ஒரு சிம்பிளான ஈரல் வறுவலை தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்த சிம்பிள் ஈரல் வறுவல் செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே தேவைப்படும். குறைவான நேரத்திலேயே நாம் செய்து முடித்து விடலாம். இந்த சிம்பிள் ஈரல் வருவதை செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட ஈரலை மிகவும் பிடித்து சாப்பிடுவார்கள். இந்த சிம்பிள் ஈரல் வருவதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
சிம்பிள் ஈரல் வறுவல் | Simple Liver Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ ஆட்டு ஈரல்
- 2 பெரிய வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 3/4 டீஸ்பூன் சீரகம்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் சோம்பு
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
- 4 காய்ந்த மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஆட்டு ஈரலை நன்கு கழுவி சுத்தம் செய்த குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், மிளகு ,சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சோம்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள ஈரானிடம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு அதனுடன் கரம் மசாலா அரைத்து வைத்த பொழுது சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு நன்றாக சுண்டி வரும் வரை வதக்க வேண்டும்.
- இப்பொழுது சிம்பிளான ஒரு ஈரல் வறுவல் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான செட்டிநாடு மட்டன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!