சிறுகீரை உருண்டை குழம்பு செய்து கொடுத்தால், ஒரு சட்டி சாதமும் நொடிப்பொழுதில் தீர்ந்து விடும்!

- Advertisement -

மதிய உணவிற்காக ஏதாவது குழம்பு வகையை செய்து அதற்கு தொட்டுக்கொள்ள காய்கறி பொரியல் அல்லது வற்றல் இவ்வாறு எதையாவது செய்யவேண்டும். ஒரு சில நேரங்களில் சிறுகீரை வைத்து உருண்டை குழும்பு வைத்தால், குழும்பு மற்றும் பதார்த்தம் இவை இரண்டிற்கும் ஒன்று சேர்த்தார் போல் இந்த கீரை உருண்டை குழம்பை உடனடியாக செய்துவிடலாம். சிறுகீரை வைத்து கூட்டு , பொரியல் தான் பலரும் செய்வர். இங்கு வித்தியாசமாக சிறுகீரை உருண்டை குழம்பு ஒரு சரியான பக்குவத்தில் வருவதற்கு இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக பின்பற்றி செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

சில உணவுகளை சமைக்கும் பொழுதே அக்கம் பக்கத்து வீட்டார்களுக்கு வாசனை எட்டி விடும்.  அந்த அளவிற்கு சைவ குழம்பும் அசைவ குழம்பின் வாசனை வர சில மசாலாக்கள் சேர்த்து செய்வது தான் இதற்கு காரணமாக இருக்கிறது. அவ்வாறு கறிக்குழம்பு சாப்பிடும் அதே சுவையில் மண மணக்க இந்த சிறுகீரை உருண்டை குழம்பு செய்து கொடுத்துப் பாருங்கள். சுடச்சுட சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடும் பொழுது நாவில் எச்சில் ஊறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த ஒரு குழம்பை செய்து வைத்தால் போதும். வாருங்கள் இப்படி சுவையான சிறுகீரை உருண்டை  குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
4 from 1 vote

சிறுகீரை உருண்டை குழம்பு | Sirukeerai Urundai kulambu Recipe In Tamil

மதிய உணவிற்காக ஏதாவது குழம்பு வகையை செய்துஅதற்கு தொட்டுக்கொள்ள காய்கறி பொரியல் அல்லது வற்றல் இவ்வாறு எதையாவது செய்யவேண்டும்.ஒரு சில நேரங்களில் சிறுகீரை வைத்து உருண்டை குழும்பு வைத்தால், குழும்பு மற்றும் பதார்த்தம்இவை இரண்டிற்கும் ஒன்று சேர்த்தார் போல் இந்த கீரை உருண்டை குழம்பை உடனடியாக செய்துவிடலாம்.சிறுகீரை வைத்து கூட்டு , பொரியல் தான் பலரும் செய்வர். இங்கு வித்யாசமாக சிறுகீரைஉருண்டை குழம்பு ஒரு சரியான பக்குவத்தில் வருவதற்கு இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகளைசரியாக பின்பற்றி செய்து பாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Sirukeerai Urundai Kulambu
Yield: 4
Calories: 120kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி பொடியாக நறுக்கிய சிறுகீரை
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 100 கிராம் கடலைப் பருப்பு
  • 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • புளி எலுமிச்சம்பழ அளவு
  • 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • கீரையை சிறிதளவு எண்ணெயில் வதக்கவும்.
  • துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து. காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
  • புளியைக் கரைத்து அதனுடன் சாம்பார் பொடி சேர்க்கவும்.
  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பு விழுதை சேர்த்துக் கிளறி, பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
  • கரைத்து வைத்த புளித் தண்ணீர் சாம்பார் கலவையை கொதிக்கவிட்டு, வதக்கிய கீரை, வேக வைத்த உருண்டைகளை சேர்க்கவும்.
  • பிறகு சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

Nutrition

Calories: 120kcal | Carbohydrates: 13g | Sodium: 240mg | Potassium: 65mg | Fiber: 7g | Calcium: 113mg | Iron: 22mg