கொஞ்சம் வித்தியாசமான சுவையில் கார சட்னி கிடைக்கும். அதே சுவையில் இன்றைக்கு நாம் ஒரு கார சட்னி ரெசிபியை பார்க்க போகின்றோம். இன்றைய சூழ்நிலையில் தக்காளியின் விலை ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. இந்த இட்லி தோசைக்கு பரிமாறப்படும் சட்னியில் எத்தனையோ வகைகள் கேள்வி பட்டிருக்கும். அதில் ரொம்பவே வித்தியாசமாக அதே நேரத்தில் ரொம்ப சுலபமாகவும் ருசியாகவும் செய்யக் கூடிய சட்னி ரெசிபியை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
தக்காளி இல்லாமல் ஒரு சைட் டிஷ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, இந்த சட்னி ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் இது சின்ன வெங்காயத்தில் செய்யப் போகும் சட்னி ரெசிபி என்பதால், இதன் ருசியும் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியமும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். சுட சுட இட்லிக்கு இந்த சட்னி இருந்தா எத்தனை இட்லி சாப்பிட்டோம்னு தெரியாது.
சின்ன வெங்காய கார சட்னி | Small Onion Chutney
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ சின்ன வெங்காயம்
- 10 காய்ந்த மிளகாய்
- 2 பல் பூண்டு
- 2 தேக்கரண்டி நல்லெண்ணெய்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- புளி சிறிதளவு
- 1 தேக்கரண்டி கடுகு
- 5x இலை கறிவேப்பிலை
- 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
செய்முறை
- வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயத்தினை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தினை சிறிது நேரம் ஆற வைக்கவும். அதன்பிறகு மிக்ஸியில் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அதில் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
- ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அதில் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். சுவையான வெங்காய கார சட்னி ரெடி.