இரவு டிபனுக்கு சாப்பிட ருசியான புடலங்காய் அடை தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

எப்பொழுதும் செய்யும் காலை உணவுகளான இட்லி, தோசை பொங்கல், சப்பாத்தி பூரிக்கு இவற்றை தவிர்த்து சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவுகளை சமைத்துக் கொடுத்தால், அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு, அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் வேலை சீக்கிரமாக முடிய வேண்டும் என்று அரிசி மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, ஒரு வாரம் முழுவதும் தோசை ஊற்றி வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுகின்றோம்.

-விளம்பரம்-

 என்றாவது ஒருநாள் சற்று வித்தியாசமான உணவுகளை செய்வதாக இருந்தாலும் அன்றைய தினம் பல வேலைகளுக்கு நடுவே இவற்றை செய்வது கடினமாக மாறிவிடுகிறது. எனினும் வாரத்திற்கு ஒரு முறையாவது கிடைக்கின்ற நேரத்தில் சுவைமிக்க, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை தட்டாமல் செய்து பாருங்கள். அப்படி உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் புடலங்காய் அடையை இவ்வாறு  செய்ய வேண்டும்.

- Advertisement -

 தோசை வகைகளிலே அடை தோசை சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் அனைத்து வகை பருப்புகளையும் சேர்த்து மாவு அரைப்பதால் அதிக அளவு சத்துக்கள் கொண்ட நல்ல ஒரு உணவு. ஆனால் புடலங்காய் சேர்த்து செய்யப்படும்  அடை தோசை மிகவும் பிடுங்கும்.. ருசி அருமையாக இருக்கும்.அப்படி இந்த புடலங்காய் அடை இந்த சமையல் குறிப்பு பதிவில் கிறிஸ்பியான அடை தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

புடலங்காய் அடை | Snake Gourd Adai Recipe In Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளைதட்டாமல் செய்து பாருங்கள். அப்படி உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் புடலங்காய் அடையை இவ்வாறு  செய்ய வேண்டும்.தோசை வகைகளிலே அடை தோசை சற்று வித்தியாசமாகஅதே நேரத்தில் சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் அனைத்து வகை பருப்புகளையும் சேர்த்துமாவு அரைப்பதால் அதிக அளவு சத்துக்கள் கொண்ட நல்ல ஒரு உணவு. ஆனால் புடலங்காய் சேர்த்துசெய்யப்படும்  அடை தோசை மிகவும் பிடுங்கும்..ருசி அருமையாக இருக்கும்.அப்படி இந்த புடலங்காய் அடை இந்த சமையல் குறிப்பு பதிவில்கிறிஸ்பியான அடை தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
 
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Snake Gourd Adai
Yield: 4
Calories: 170kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 ஆழாக்கு புழுங்கலரிசி
  • 1 ஆழாக்கு பச்சரிசி
  • 1/2 ஆழாக்கு கடலைப்பருப்பு
  • 1/2 ஆழாக்கு துவரம் பருப்பு
  • 1 கைப்பிடி உளுத்தம் பருப்பு
  • 1 கைப்பிடி பாசிப்பருப்பு
  • 2 மேசைக்கரண்டி கொள்ளு
  • 1 பாகம் பிஞ்சு புடலங்காய்
  • 10 இலைகள் புதினா
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி தனியா  
  • 2 சிட்டிகை பெருங்காயம்
  • 6 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • 6 கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • புழுங்கலரிசி முதல் கொள்ளு வரை உள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும்அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், தனியா, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து சின்ன ரவை பதத்திற்கு அரைக்கவும்.
  • கடைசியாக நறுக்கிய வெங்காயம், புதினா, பொடியாக நறுக்கிய புடலங்காய், அதனுள்ளே இருக்கும் விதை மற்றும் சதைப்பகுதி ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு சுற்று அரைத்துக் கொள்ளவும்,
  • அதனுடன் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து நன்கு கலக்கவும். (மாவு தயிர் பதத்தில் இருக்க வேண்டும், தண்ணீர் அதிகமாக ஊற்றக் கூடாது).
  • சிறிய வாணலி அல்லது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து மொத்தமாக ஊத்தாப்பம் போல் ஊற்றி மூடி வேகவைக்கவும்.
  • (அதிகம் பரவலாக ஊற்ற வேண்டாம்)
  • ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
  • மொறுமொறுப்பான புடலங்காய் அடை தயார்.

செய்முறை குறிப்புகள்

தேங்காய் சட்னி, அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.சூடாக சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 170kcal | Carbohydrates: 18g | Protein: 6.9g | Fat: 2.1g | Saturated Fat: 0.6g | Sodium: 57mg | Potassium: 7mg | Fiber: 2.3g | Calcium: 4mg | Iron: 0.9mg