புடலங்காய் வாங்கி இப்மடி கூட செய்யலாம் ருசியான புடலங்காய் முட்டை சாதத்தை நீங்களும் இப்படடி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

முட்டை சாதம் என்றாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். முட்டை யுடன் புடலங்காய்  சேர்த்து ஒருமுறை இப்படி சாதம் செய்து பாருங்களேன் , அருமையாக இருக்கும். காலையில் எழுந்து ஒரு வெள்ளை சாதத்தை வடித்துவிட்டால் போதும். நாவிற்கு சுவை தரும் இந்த முட்டை சாதத்தை அடுத்த சுலாமாக செய்துவிடலாம். லஞ்ச் பாக்ஸுக்கு தேவை என்றாலும் கட்டிக் கொடுக்கலாம். திரும்பி வரும்போது நிச்சயம் லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும். புடலங்காய் பிடிக்காது புடலங்காய் சாப்பிடாத குழந்தைகளை சாப்பிட வைக்க இந்த ரெசிபி உதவியாக இருக்கும்.

-விளம்பரம்-

ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத பொழுது இந்த புடலங்காய் ,முட்டை வைத்து சுவையான புடலங்காய் முட்டை சாதம் சாதத்தை செய்துவிட முடியும். இதனை காலையில் வடித்த மிஞ்சிய சாதத்தில் செய்து கொடுக்க மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வதற்கு  குறைவாகத்தான் நேரம் செலவாகும். வாருங்கள் இந்த சுவையான புடலங்காய் முட்டை சாதத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
5 from 1 vote

புடலங்காய் முட்டை சாதம் | Snake guard Egg Recipe Rice In Tamil

புடலங்காய் பிடிக்காது புடலங்காய் சாப்பிடாதகுழந்தைகளை சாப்பிட வைக்க இந்த ரெசிபி உதவியாக இருக்கும். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்றநேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து சாதம் செய்து விடலாம்என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத பொழுதுஇந்த புடலங்காய் ,முட்டை வைத்து சுவையான புடலங்காய் முட்டை சாதம் சாதத்தை செய்துவிடமுடியும். இதனை காலையில் வடித்த மிஞ்சிய சாதத்தில் செய்து கொடுக்க மிகவும் அருமையானசுவையில் இருக்கும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை செய்வதற்கு  குறைவாகத்தான் நேரம் செலவாகும்.வாருங்கள் இந்த சுவையான புடலங்காய் முட்டை சாதத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்தபதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Cuisine: tamil nadu
Keyword: Snake Gourd Egg Rice
Yield: 4
Calories: 12kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சாதம் உதிராக வடித்த
  • கால் கிலோ புடலங்காய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 பூண்டு பல்
  • 3 முட்டை
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • டீஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • புடலங்காய் விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் காய வைத்து அதனுடன் கடுகு, வெங்காயம், மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளியைப் வதக்கவும். போட்டு அதன் பின் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பிறகு புடலங்காயைச் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி வேகவைக்கவும்
  • அதன்பிறகு முட்டையை உடைத்து ஊற்றி வதக்கி உதிரியாக வரும் வரை கிளறி விடவும். உதிராக வடித்த சாதத்தை அதனுடன் சேர்த்து கலக்கவும், சுவையான புடலங்காய் முட்டை சாதம் |ரெடி.
     

Nutrition

Serving: 400g | Calories: 12kcal | Carbohydrates: 56g | Protein: 12g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 8mg | Potassium: 89mg | Calcium: 24mg