ருசியான சோயா கோலா உருண்டை ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்கள்! அப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

- Advertisement -

மாலை நேரத்தில் சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று ஆசையாக உள்ளதா? அப்படியானால் மீல் மேக்கர் கொண்டு அற்புதமான கோலா உருண்டை செய்து சுவையுங்கள். இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மீல் மேக்கர் கோலா உருண்டை எப்படி செய்வதென்று தான் நாம் பார்க்க இருக்கிறோம். அசைவப் பிரியர்களாக இருந்தால், சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, இவைகளை விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த வரிசையில், உங்கள் வீட்டில் இருக்கும் மீல் மேக்கரை வைத்து, சைவ பிரியர்கள் மீல் மேக்கர் கோலா உருண்டையை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு இதை ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வித்தியாசமாகவும் இருக்கும். சுவையாகவும் இருக்கும். பெரும்பாலும் இந்த மீல் மேக்கர் உணவு வகைகள் குழந்தைகள் அதிகம் உண்பதில்லை, ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவாக செய்து கொடுத்தால் நல்லது தானே. மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அப்படி கேட்கும் போது, அவர்களுக்கு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், இந்த மீல் மேக்கர் கோலா உருண்டை செய்து கொடுங்கள். இந்த மீல் மேக்கர் கோலா உருண்டை காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போதும் செய்து கொடுக்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

சோயா கோலா உருண்டை | Soya Kola Urundai Recipe In Tamil

மாலை நேரத்தில் சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று ஆசையாக உள்ளதா? அப்படியானால் மீல் மேக்கர் கொண்டு அற்புதமான கோலா உருண்டை செய்து சுவையுங்கள். இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மீல் மேக்கர் கோலா உருண்டை எப்படி செய்வதென்று தான் நாம் பார்க்க இருக்கிறோம். அசைவப் பிரியர்களாக இருந்தால், சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, இவைகளை விருப்பமாக சாப்பிடுவார்கள். அந்த வரிசையில், உங்கள் வீட்டில் இருக்கும் மீல் மேக்கரை வைத்து, சைவ பிரியர்கள் மீல் மேக்கர் கோலா உருண்டையை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Soya Kola Urundai
Yield: 4 People
Calories: 52kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் மீல் மேக்கர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4 கப் பொட்டுக்கடலை மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் அதனுடன் வெந்நீரில் ஊற வைத்த மீல் மேக்கரை தண்ணீர் பிழிந்து சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை‌ ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்பு தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • பின் பொட்டு கடலை மாவு, நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் இந்த கலவையை கொஞ்சம் எடுத்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளாக உருட்டி வைத்த கோலா உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சோயா கோலா உருண்டை தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 52kcal | Carbohydrates: 6g | Protein: 24.1g | Fat: 2.5g | Sodium: 18mg | Potassium: 35mg | Fiber: 1.3g | Vitamin C: 52mg | Calcium: 35mg | Iron: 2mg

இதனையும் படியுங்கள் : சோயா சங்ஸ் வெஜ் பிரியாணியை உதிரி உதிரியாக அருமையான சுவையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்களேன்!!