காரசாரமான மசாலா முட்டை உங்க வீட்ல செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் எப்பவுமே உங்க வீட்ல இதுதான் செய்வீங்க!!!

- Advertisement -

நம்ம எல்லாருக்கும் கிடைக்க கூடிய ஒரு லோ பட்ஜெட் அசைவம்னா அது முட்டை தான். வீட்ல அசைவம் எடுக்காத அன்னைக்கு கூட முட்டை இருந்தா போதும் அதை வச்சு ஒரு குழம்பு செஞ்சு சாப்பிட்டா ஏதோ ஓரளவுக்கு அந்த நாள் முழுமையடையும் சொல்லலாம். ஒரு சிலர் தினமும் முட்டை சாப்பிடுவாங்க. முட்டை வச்சு நம்ம எக்கச்சக்கமான சூப்பரான உணவுகள் செய்யலாம் முட்டை பணியாரம் ,முட்டை ஆம்லெட் ,முட்டை தொக்கு, முட்டை குழம்பு ,கலக்கி, ஹாஃப் பாயில் அப்படின்னு எக்கச்சக்கமான உணவுகள் சூப்பரான டேஸ்ட்ல செய்ய முடியும்.

-விளம்பரம்-

பசிக்குது அப்படின்னா வீட்ல எதுவும் இல்லனா முட்டை இருந்தா போதும் ஒரு ஆம்லெட் செஞ்சு சாப்பிட்டாலே வயிறு கொஞ்சம் புல் ஆயிடும். அந்த அளவுக்கு நமக்கு முட்டை நிறைய நேரத்தில் கை கொடுக்கும் நம்ம வீட்ல தயிர் சாதம் சாம்பார் சாதம் அப்படின்னு ரொம்ப நிறைய மசாலாக்கள் போட்டு செய்யாத மெயின் சாப்பாட்டுக்கு சைட்ஷா ஏதாவது காரசாரமா இருந்தா சூப்பரா இருக்கும் அப்படின்னு நம்ம ஃபீல் பண்ணுவோம்.

- Advertisement -

அந்த வகையில இன்னைக்கு ஒரு வித்தியாசமான டேஸ்ட்ல செய்யக்கூடிய மசாலா முட்டை தான் பார்க்க போறோம். இந்த மசாலா முட்டைக்கு தேவையான மசாலாவை வறுத்து அரைச்சு செய்றதால அதோட மணம் ரொம்ப சூப்பரா இருக்கும். பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து அந்த வாசனை நம்ம அனுப்பி வைக்கலாம் அந்த அளவுக்கு சூப்பரான வாசனையோட டேஸ்ட் அட்டகாசமா ரொம்பவே சிம்பிளான ஒரு சைடு டிஷ்ஷாவும் இருக்கும். தயிர் சாதம் வெச்சிட்டு அது கூட இந்த மசாலா முட்டையை சேர்த்து வைத்து சாப்பிட்டால் போதும் டேஸ்ட் ரொம்பவே அருமையா அவ்ளோ சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான அருமையான மசாலா முட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

காரசாரமான மசாலா முட்டை | Spicy egg Masala

மசாலா முட்டைக்கு தேவையான மசாலாவை வறுத்து அரைச்சு செய்றதால அதோட மணம் ரொம்ப சூப்பரா இருக்கும். பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து அந்த வாசனை நம்ம அனுப்பி வைக்கலாம் அந்த அளவுக்கு சூப்பரான வாசனையோடடேஸ்ட் அட்டகாசமா ரொம்பவே சிம்பிளான ஒரு சைடு டிஷ்ஷாவும் இருக்கும். தயிர் சாதம் வெச்சிட்டு அது கூட இந்த மசாலா முட்டையை சேர்த்து வைத்து சாப்பிட்டால் போதும் டேஸ்ட் ரொம்பவே அருமையா அவ்ளோ சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான அருமையான மசாலா முட்டை எப்படிசெய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Spicy Egg Masala
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 7 வெந்தயம்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 7 பூண்டு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டையை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் மிளகு சீரகம் சோம்பு வெந்தயம், உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைக்கவும்.
  • அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள் மல்லிதூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதன் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து தேவையானஅளவு எடுத்து சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து அடுப்பு மிதமான தீயில் வைத்து கலந்து விடவும்.
  • வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி அதில் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்தால் சுவையான மசாலா முட்டை தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 199g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!