- Advertisement -
வணக்கம் நண்பர்களே. இந்த பதிவுல நாம என்ன பாக்க போறோம்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்களா. பூண்டு சட்னி பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம். பூண்டு குழம்பு, பூண்டு ஊறுகாய், பூண்டு துவையல், பூண்டு பால், பூண்டு லேகியம் என அனைத்திலும் பூண்டை சேர்த்து உண்ணுகிறோம்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் சுவையான கத்தரி பூண்டு தொக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
ஏன் என்றால் பூண்டு மருத்துவ குணம் நிறைந்தது. இந்த பூண்டு சட்னி உடலுக்கு ஆரோக்கியமானது. இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்ற உணவு. வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பூண்டு தேங்காய் சட்னி | Garlic Coconut Chutney Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே. இந்த பதிவுல நாம என்ன பாக்க போறோம்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்களா. பூண்டு தேங்காய் சட்னி பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம். பூண்டு குழம்பு, பூண்டு ஊறுகாய், பூண்டு துவையல், பூண்டு பால், பூண்டு லேகியம் என அனைத்திலும் பூண்டை சேர்த்து உண்ணுகிறோம். ஏன் என்றால் பூண்டு மருத்துவ குணம் நிறைந்தது. இந்த பூண்டு சட்னி உடலுக்கு ஆரோக்கியமானது. இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்ற உணவு. வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Yield: 4 Prople
Calories: 95kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 2tsp எண்ணெய்
- 8 வர மிளகாய்
- 2 tsp உளுந்தம் பருப்பு
- 1 1tsp சீரகம்
- 25 பல் பூண்டு
- 1 சில் தேங்காய் நறுக்கியது
- 2 இன்ச் புளி
- கல் உப்பு தேவையான அளவு
தாளிக்க
- 1 Tbsp எண்ணெய்
- 1/2 Tsp கடுகு
- 4 சின்ன வெக்காயம் பொடியாக நறுக்கியது
- 1 கொத்து கருவேப்பிலை
செய்முறை
- முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் வத்தல் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
- அதோடு சீரகம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் உளுந்தம் பருப்பு, நிறம் மாறும் வரை நன்கு வறுப்பட்டு சிவந்து வரும் அதே நேரத்தில் பூண்டும் வதங்கிவிடும்.
- அதன் பின் இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி விட்டு அதோடு புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
- பின் கடாயை இறக்கி நாம் வதக்கிய பொருட்களை நன்கு குளிர வைக்க வேண்டும். பொருட்கள் நன்கு குளிர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கெிள்ளுங்கள்.
- பின் வழக்கம் போல் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, கருவேப்பில்லை, சின்ன வெய்காய் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவு தான் பூண்டு தேங்காய் சட்னி தயார்.
Nutrition
Serving: 550g | Calories: 95kcal | Carbohydrates: 4g | Protein: 2g | Saturated Fat: 0.5g | Potassium: 52mg | Sugar: 0.5g