சுவையான தக்காளி முட்டைகோஸ் காரக்கறி ஒரு முறை இப்படி வீட்டிலயே ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி இப்படி செஞ்சு பாருங்க, ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் பத்தாது! சாதத்துக்கு தொட்டுக்க மட்டுமல்ல, சாதத்துடன் பிசைந்து கூட சாப்பிடலாம்.சாதத்துக்கு தொட்டுக்க மட்டுமல்ல, சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கும் ரொம்பவே சுவையாக இருக்கும் இந்த முட்டைகோஸ் தக்காளி முட்டைகோஸ் காரக் கறி செய்வதற்கு அதிக நேரம் கூட எடுப்பதில்லை.

-விளம்பரம்-

அதிக சத்துக்கள் நிறைந்துள்ள முட்டைகோஸ் கூட்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணியும். சுவையான தக்காளி முட்டைகோஸ் காரக் கறி கமகமக்கும் மணத்துடன் எளிதாக இம்முறையில் செய்து பாருங்களேன்.

- Advertisement -

முட்டைக்கோசை வைத்து வித்தியாசமான ஒரு ரெசிபியைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஆப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பத்திற்கு, சூப்பரான சைட் டிஷ் இது. இதை முட்டைக்கோஸ் பால்கறி என்று சொல்லுவார்கள். வித்தியாசமான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் முட்டைக்கோஸ் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி | Tomato Cabbage Curry

முட்டைக்கோசை வைத்து வித்தியாசமான ஒரு ரெசிபியைத்தான்இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஆப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பத்திற்கு,சூப்பரான சைட் டிஷ் இது. இதை முட்டைக்கோஸ் பால்கறி என்று சொல்லுவார்கள். வித்தியாசமானஇந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் முட்டைக்கோஸ்வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Tomato Cabbage Kaara Curry
Yield: 4
Calories: 238kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ முட்டைகோஸ்
  • 1 சிறியது தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 சிறியது பெரிய வெங்காயம்
  • டேபிள் ஸ்புன் மிளகாய் தூள்

செய்முறை

  • முட்டைகோஸை 1/2 அங்குல நீளத்திற்கு நன்றாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து உடன் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் இவற்றையும் உடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின்னர் நறுக்கிவைத்துள்ள முட்டைகோஸையும் சேர்க்கவும்.
  • சிறிது தண்ணீர்சேர்த்து 10 நிமிடம் வாணலியை மூடி அவ்வப்பொழுது கிளறி வரவும். தண்ணீர் நன்கு சுண்டியதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கிளறி 1 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.
  • முட்டை விரும்பிகள் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி 5 நிமிடம் வைத்திருந்து எடுக்கலாம். சுவை கூடும்.
  • உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். உடன் சிறிது புளி சேர்த்தால் இன்னும் சுவைக்கும்.
  • தக்காளி முட்டைகோஸ் காரக் கறி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 12g | Potassium: 381mg | Fiber: 2g