உடலுக்கு ஆரோக்கியமான காய்கறிகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது கிடையாது. உணவுப் பொருட்களிலேயே கீரையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அத்தகைய கீரையை பொரியல், கூட்டு என்று எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். உங்களுக்கு மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுமாறு கீரையை சமைத்து சாப்பிட நினைத்தால், கூட்டு செய்து சாப்பிடுங்கள்.
இதனையும் படியுங்கள் : அவசியம் வாரம் ஒரு முறை ருசியான அகத்திக்கீரை கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
அதுவும் தேங்காய் பால் அரைத்து சேர்த்து கூட்டு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். சிறுகீரை மருத்துவ குணம் கொண்டது. இந்தக் கீரையினால் உடலுக்கு அழகு கிடைக்கும். இங்கு தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த கீரை தேங்காய்பால் கூட்டு எல்லா சாதங்களுடனும் சேர்த்து சுவைக்கலாம்.
சிறுகீரை தேங்காய்பால் கூட்டு | Spinach With Coconut Milk Gravy
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 கட்டு சிறுகீரை
- 2 கப் தேங்காய் பால்
- 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
- 4 பச்சை மிளகாய்
- கல் உப்பு தேவையானஅளவு
தாளிக்க
- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
செய்முறை
- முதலில் கீரையை தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு கழுவி எடுத்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தேங்காய் பால் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின் அத்துடன் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்னர் கல் உப்பு சேர்த்து கலந்து விடவும். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- கீரையில் உள்ள தண்ணீர் வற்றும் போது தயாராக வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொஞ்சம் சூடானதும் இறக்கி விடவும்.
- தயாரான கீரை கூட்டை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிக மிக சுவையான கீரை தேங்காய்பால் கூட்டு தயார்.