மழை காலத்தில் தொண்டைக்கு இதமா ருசியான முளைகட்டிய நவதானிய சூப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

- Advertisement -

சாதாரண  பயறில் இருக்கும் சத்துக்களை விட முளைகட்டிய பயறில் பல மடங்கு சத்துக்கள் அதிகம். இதில் சூப் செய்து சாப்பிடும் பொழுது அதன் சுவையும் அபாரமாக இருக்கும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த முளைகட்டிய பயறை வைத்து எப்படி சூப்பரான சுவையில் எளிதாக சூப் செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

-விளம்பரம்-

இந்த மழை காலத்துல எல்லாருக்கும் பசியின்மையால் சாப்பிடறதுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். ஏதாவது சூடா குடிச்சா நல்லா இருக்கும் அப்படின்ற மாதிரியான ஒரு எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி நமக்கு சூடா ஏதாவது குடிக்கணும் அப்படின்னு தோணும்போது சிலர் டீ குடிப்பாங்க சிலர் காபி குடிப்பாங்க ஆனால் நம்மள மாதிரி இன்னும் சிலருக்கு சூடா காரமா ஏதாவது சூப் குடிச்சா நல்லா இருக்கும் அப்படின்ற மாதிரி தோன்றும்.

- Advertisement -

இந்த சுவையான ஆரோக்கியமான முளைகட்டிய நவதானிய சூப் ரொம்ப ஹெல்தியான டேஸ்டியா செய்து வீட்டுல இருக்க எல்லாருக்கும் கொடுத்துட்டு நம்மள குடிக்கும்போது சும்மா மழையோட குளிருக்கு இதம்மா இந்த சூப் உள்ள போகும்போது சும்மா  கத கதனு இருக்கும் உடம்புக்கு. அந்த மாதிரி சுவையான முளைகட்டிய நவதானிய சூப் செய்து வீட்ல இருக்க எல்லாரும் உங்களை புகழ்ந்த தளிருவாங்க. இந்த சுவையான ஆரோக்கியமிக்க சூப் ரொம்ப ஈஸியாவே டக்குனு செய்து கொடுத்திடலாம். இந்த சுவையான ஆரோக்கியம் மிக்க முளைகட்டிய நவதானிய சூப் எப்படி சுலபமா செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

முளைகட்டிய நவதானிய சூப் | Sprouted Multigrain Soup Recipe In Tamil

சுவையான ஆரோக்கியமான முளைகட்டிய நவதானிய சூப் ரொம்ப ஹெல்தியான டேஸ்டியா செய்து வீட்டுல இருக்க எல்லாருக்கும்கொடுத்துட்டு நம்ம குடிக்கும் போது சும்மா மழையோட குளிருக்கு இதம்மா இந்த சூப் உள்ளபோகும்போது சும்மா  கத கதனு இருக்கும் உடம்புக்கு.அந்த மாதிரி சுவையான முளைகட்டிய நவதானிய சூப் செய்து வீட்ல இருக்க எல்லாரும் உங்களைபுகழ்ந்த தளிருவாங்க. இந்த சுவையான ஆரோக்கியமிக்க சூப் ரொம்ப ஈஸியாவே டக்குனு செய்துகொடுத்திடலாம். இந்த சுவையான ஆரோக்கியம் மிக்க முளைகட்டிய நவதானிய சூப் எப்படி சுலபமாசெய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Appetizer
Cuisine: tamil nadu
Keyword: Sprouted Multigrains Soup
Yield: 4
Calories: 22kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் முளைகட்டிய பயறுகள்
  • 1 வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள்ஸ்பூன் தனியா
  • மிளகு காரத்துக்கேற்ப
  • கொத்தமல்லி தழை தேவையான அளவு.
  • 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • 1 கப் தேங்காய்ப் பால்
  • 1/2 கப் புளிக்காத கெட்டி தயிர்
  • உப்பு தேவையான அளவு.

செய்முறை

  • மிக்ஸியில் வெங்காயம், பூண்டு. தனியா, சீரகம்,மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும்சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  • தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால்சேர்த்து. கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்
  • பரிமாறு வதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்குஅடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
  • சூப்பரான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி

Nutrition

Serving: 200g | Calories: 22kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 5mg | Potassium: 318mg | Fiber: 1g | Sugar: 2g

இப்படியும் படியுங்கள் : சுட சுட ருசியான பூசணிக்காய் சூப் இப்படி வீட்டில் செய்து கொடுத்தால் டம்பளர் டம்பளராக குடிபாங்க!