மதிய உணவுக்கு சாதத்துக்கு சைடிஷாக சாப்பி ருசியான ஸ்டஃப்டு பாகற்காய் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

- Advertisement -

பாகற்காய் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கசப்பு தான். கசப்பா இருக்கிற பாகற்காய் நிறைய பேர் விரும்ப மாட்டாங்க. ஆனால் அந்த பாகற்காய் எவ்வளவு நன்மைகள் இருக்கு எவ்வளவு சத்துக்கள் இருக்கு. கசப்பும் உடலுக்கு தேவை அறுசுவைல நமக்கு அஞ்சு சுவைதான் பிடிக்குது. ஆறாவது சுவையான அந்த கசப்பு ஏன் பிடிக்க மாட்டேங்குது? அறுசுவையும் பிடிக்க வேண்டும் ஆறாவது சுவையான கசப்பும் பிடிக்கணும். அந்த கசப்பு உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாரம் ஒரு முறையாவது கசப்பு சுவையுடைய உணவை நமது உணவில் சேர்த்து கொள்வது நமக்கு ரொம்ப நல்லது. கசப்பு சுவை அப்படிங்கறது உடம்புல இருக்குற ரத்தத்தை சுத்திகரிக்கிறதுக்கும் ரொம்ப உதவும் .

-விளம்பரம்-

மலச்சிக்கல், சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் இருக்கும் பூச்சிகள் மாதிரி நிறைய நோய்களை குணப்படுத்துவதற்கு இந்த கசப்பு தன்மை கொண்ட உணவு பொருட்கள் முக்கியமான காரணமா இருக்கு. அதுலயும் பாகற்காய்க்கு முதலிடம். பாகற்காய் பாக்கும்போது எல்லாருக்கும் ஆசையா இருக்கும். ஆனால் அதை சாப்பிடணும் அப்படின்னு நினைச்சோம்னா அதோட கசப்பு கண்ணு முன்னாடி வந்து சாப்பிட விடாமல் பண்ணிடும்.

- Advertisement -

அதனால பாகற்காயை கசப்பு தெரியாத அளவுக்கு எப்படி சுவையா செஞ்சு சாப்பிடணும் அப்படிங்கிறதுல தான் விசயமே இருக்கு. நம்ம பாகற்காயில் வறுவல் , சாம்பார் , கூட்டு, தொக்கு, ஊறுகாய் என்று விதவிதமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஆந்திரா ஸ்டைல பாகற்காய  ஸ்டஃப் பண்ணி சாப்பிட்டு இருக்கமாட்டீர்கள். அப்படிப்பட்ட ஆந்திரா ஸ்டைல் ஸ்டஃப்டு பாகற்காய்  ரொம்ப சுவையாவும்   எப்படி செய்யலாம் அப்படிங்கிறத இந்த பதிவில் பார்க்கலாம்.

Print
5 from 1 vote

ஸ்டஃப்டு பாகற்காய் | Stuffed bitterguard recipe in tamil

பாகற்காய் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கசப்பு தான். கசப்பா இருக்கிற பாகற்காய் நிறைய பேர் விரும்ப மாட்டாங்க. ஆனால் அந்த பாகற்காய் எவ்வளவு நன்மைகள் இருக்கு எவ்வளவு சத்துக்கள் இருக்கு. கசப்பும் உடலுக்கு தேவை அறுசுவைல நமக்கு அஞ்சு சுவைதான் பிடிக்குது. ஆறாவது சுவையான அந்த கசப்பு ஏன் பிடிக்க மாட்டேங்குது? அறுசுவையும் பிடிக்க வேண்டும் ஆறாவது சுவையான கசப்பும் பிடிக்கணும். அந்த கசப்பு உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாரம் ஒரு முறையாவது கசப்பு சுவையுடைய உணவை நமது உணவில் சேர்த்து கொள்வது நமக்கு ரொம்ப நல்லது. கசப்பு சுவை அப்படிங்கறது உடம்புல இருக்குற ரத்தத்தை சுத்திகரிக்கிறதுக்கும் ரொம்ப உதவும் .
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Side Dish
Cuisine: andhra
Keyword: Channa Dal Stuffed Chappathi, Stuffed Egg Chappathi, Veg Stuffed Chappathi
Yield: 6 People
Calories: 180kcal
Cost: 50

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 7 பாகற்காய்
  • நெல்லிக்காய் அளவு புளி
  • 10 பல் பூண்டு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 1/2 ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்.
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

செய்முறை

  • முதலில் பாகற்காயை கீறி நடுவில் உள்ள விதைகளை எடுத்து விட வேண்டும். அனைத்து பாகற்காயும் இதே போல் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடானதும்  அதில் கீறி வைத்துள்ள பாகற்காய் சிறிதளவு புளி, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பாகற்காய் முக்கால் பதம் வெந்த பிறகு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு மிக்ஸி ஜாரில் பூண்டு பற்கள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு முக்கால் பதம் வேக வைத்து எடுத்துள்ள பாகற்காயின் நடுவில் இந்த பூண்டு மசாலாவை வைத்து ஸ்ட்ஃப் செய்ய வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பாகற்காயை பொரிப்பதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி ஸ்ட்ஃப் செய்து வைத்துள்ள பாகற்காய்களை எண்ணெய் சூடானதும் அதில் சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான ஸ்டஃப்டு பாகற்காய் தயார்.

Nutrition

Calories: 180kcal | Carbohydrates: 15g | Protein: 12g | Fat: 20g