ரெஸ்ட்டாரெண்ட் சுவையை மிஞ்சும் ருசியான ஸ்டஃப்டு கனவாய் ஒருமுறை வீட்டில் செய்து அனைவர்க்கும் கொடுத்து அசத்துங்கள்!

- Advertisement -

கடல் உணவுகளில் கணவாய் மீனுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. இந்த சுவையான கணவாய் மீன் ரொம்ப  ரொம்ப ஆரோக்கியமானது கூட . இந்த கணவாய் மீனில் அதிக அளவு கால்சியம ஒமேகா  கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கிறதுனால இந்த கணவாய் மீன்கள் உடலுக்கு ரொம்பவே நன்மை தரக்கூடியவை. இந்த கணவாய் மீன்களில் வறுவல் , பொரியல், குழம்பு, 65 கூட போடலாம். இப்போது இந்த கணவாய் மீனை பயன்படுத்தி ஸ்டஃப்டு கணவாய் பண்ணப்போறோம்.

-விளம்பரம்-

இது ரொம்பவே டேஸ்டா இருக்கும் இந்த கணவாய் கேரளா உணவுகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த மாதிரி இந்த ஸ்டஃப்டு கணவாய் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சிருக்க இருககோம். எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கணவாயை கட் பண்ணி தான் நம்ம சமையலுக்கு சேர்த்துப்போம் ஆனா இப்போ அந்த கணவாயோட தலைப்பகுதியை முழுதாகவே சேர்த்து சாப்பிட போறோம். இந்த சுவையான கணவாய் மீன் ஸ்டஃப்டு ரொம்பவே ஈசியா அப்புறம் சுலபமாக கூட செய்யறதுக்கு இந்த சுவையான ஸ்டஃப்டு கணவாயை ஒருமுறை செய்தும் கொடுத்தீங்கன்னா அதுக்கப்புறம் எல்லாரும் திரும்பத் திரும்ப இதே மாதிரி செய்யணும் கேட்பாங்க.

- Advertisement -

நீங்க எப்ப எல்லாம் கணவாய் வாங்குறீங்களோ அப்ப எல்லாம் அதுல தொக்கு செய்ய வேண்டியதை விட இந்த மாதிரி ஸ்டஃப்டு கணவாய் செய்து குடுங்க அப்படின்னு கேக்குற அளவுக்கு வீட்ல இருக்குறவங்க எல்லாருக்குமே ரொம்பவே புடிச்சி போயிடும் இந்த ஸ்டஃப்டு கணவாய் ஓட ருசி. சரி வாங்க இந்த ஸ்டஃப்டு கணவாய் எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
2 from 1 vote

ஸ்டஃப்டு கனவாய் | Stuffed Squid Recipe In Tamil

ருசியான ஸ்டஃப்டு கனவாய், ரொம்பவே டேஸ்டா இருக்கும் இந்த கணவாய் கேரளா உணவுகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த மாதிரிஇந்த ஸ்டஃப்டு கணவாய் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சிருக்க இருககோம். எல்லாருக்குமேரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கணவாயை கட் பண்ணி தான் நம்ம சமையலுக்கு சேர்த்துப்போம்ஆனா இப்போ அந்த கணவாயோட தலைப்பகுதியை முழுதாகவே சேர்த்து சாப்பிட போறோம். இந்த சுவையானகணவாய் மீன் ஸ்டஃப்டு ரொம்பவே ஈசியா அப்புறம் சுலபமாக கூட செய்யறதுக்கு இந்த சுவையானஸ்டஃப்டு கனவாயை ஒருமுறை செய்தும் கொடுத்தீங்கன்னா அதுக்கப்புறம் எல்லாரும் திரும்பத்திரும்ப இதே மாதிரி செய்யணும் கேட்பாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: starters
Cuisine: tamil nadu
Keyword: Stuffed Squid
Yield: 4
Calories: 143kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ கணவாய் மீன்
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 ஸ்பூன் கரமசாலா
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கணவாய் மீனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் அதனுடைய தலைப்பகுதியை நறுக்கிவிடாமல் முழுவதுமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள கணவாய் மீனில் மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு, சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாகவதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்துபச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
  • பிறகு அதில்  மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விடவேண்டும். பச்சை வாசனை சென்ற பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.பிறகு தயார் செய்து வைத்துள்ள மசாலா கணவாய் மீனுக்குள் வைத்து பற்குத்தும் குச்சியை வைத்து மேலே திறந்துள்ளபகுதியை மூடி விட வேண்டும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் தயார் செய்து வைத்துள்ள ஸ்டஃப்டு கணவாய்களை அதில் சேர்த்து இருபுறமும் திருப்பி போட்டு வெந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையான ஸ்டஃப்டு கனவாய் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 143kcal | Carbohydrates: 88g | Monounsaturated Fat: 5.34g | Cholesterol: 88mg | Potassium: 223mg | Iron: 1mg