அரேபிய நாடுகள் ரொம்ப ஃபேமஸ் இருக்கக்கூடிய சுலைமானி டீ இப்படி போட்டு குடிச்சு பாருங்க!

- Advertisement -

பொதுவா ஒரு சில உணவுகளை நம்ம எமோஷன் அப்படின்னு சொல்லுவோம். அந்த வகையில டீ காப்பியும் ஒரு சிலருக்கு எமோஷன் தான். டீக்கடை எழுதுங்க டீ காபி குடிக்கிறது ரொம்பவே ஒரு சிலருக்கு பிடிக்கும். வீட்ல கூட டீ காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கிறவங்க இருக்காங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம மசாலா டீ சுலைமானி டீ அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு சூப்பரான டீ ரெசிபி தான் பார்க்க போறோம்.

-விளம்பரம்-

இந்த டீ அரேபிய நாடுகளில் ரொம்பவே பேமஸ். இந்த டீயை நிறைய ஹெவியான உணவுகள் சாப்பிட்ட பின்னாடி குடிச்சா செரிமானத்துக்கு ரொம்பவே உதவியா இருக்கும். இந்த டீ குடிக்கிறதால உடம்புல இருக்க கொழுப்புகள் தேவையில்லாத கொழுப்புகள் எல்லாமே கரையும். இந்த டீயில் நம்ம பால் எதுவும் சேர்க்காமல் குடிக்கிறதால நமக்கு ரொம்ப நல்லது.

- Advertisement -

தினமும் கூட இந்த டீ நம்ம குடிக்கலாம் நம் உடம்புக்கு எதுவும் ஆகாது. கொலஸ்ட்ரால் சம்பந்தமான பிரச்சினைகளும் சரியாகும். இதுல சொல்லி இருக்க கரெக்டான அளவுகள்ள இந்த டீ போட்டு குடிச்சா ஒரு பெர்பெக்ட்டான டீ நமக்கு கிடைக்கும். இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த இந்த டீயை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

Print
5 from 1 vote

சுலைமானி டீ | Sulamaani Tea Recipe In Tamil

பொதுவா ஒரு சில உணவுகளை நம்ம எமோஷன் அப்படின்னு சொல்லுவோம். அந்த வகையில டீ காப்பியும் ஒரு சிலருக்குஎமோஷன் தான். டீக்கடை எழுதுங்க டீ காபி குடிக்கிறது ரொம்பவே ஒரு சிலருக்கு பிடிக்கும்.வீட்ல கூட டீ காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கிறவங்க இருக்காங்க. அந்த வகையில இன்னைக்குநம்ம மசாலா டீ சுலைமானி டீ அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு சூப்பரான டீ ரெசிபி தான் பார்க்கபோறோம். இதுல சொல்லி இருக்க கரெக்டான அளவுகள்ள இந்த டீ போட்டுகுடிச்சா ஒரு பெர்பெக்ட்டான டீ நமக்கு கிடைக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Sulaimaani Tea
Yield: 4
Calories: 306kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1/4  டீஸ்பூன் எலுமிச்சைசாறு
  • 1/4  டீஸ்பூன் டீ தூள்
  • 1 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை

செய்முறை

  • பட்டை கிராம்பு ஏலக்காய் மூன்றையும் சேர்த்து இடித்து கொள்ளவும்
  • இஞ்சியையும் அதனுடன் சேர்த்து நன்றாக இடித்து கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில்1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இடித்து வைத்துள்ளதை சேர்த்து கொள்ளவும்
  • அதனுடன் நாட்டு சர்க்கரை டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • நன்றாக கொதித்த பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் சுவையான சுலைமானி டீ தயார்

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 1g | Sodium: 11.7mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் புதினா டீ செய்வது எப்படி ?