- Advertisement -
ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது. சுவரொட்டியில் அமினோ அமிலங்கள், மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளது. குறைந்த ஹீமோகுளோபின்னால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது இரும்பு சத்துக்காக பரிந்துரைக்க படுகிறது. மண்ணீரலில் வெறும் 50 கிராம் நமது தினசரி இரும்புசத்து தேவையில் 100 சதவீதம் செய்கிறது.
-விளம்பரம்-
ஆட்டு மண்ணீரலில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்{ இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகப்படுத்துகிறது} மேலும் இரத்த சோகை வரால் தடுக்கிறது.
- Advertisement -
இவ்வளவு நன்மையுள்ள ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
சுவரொட்டி வறுவல் | Suvarotti Fry Recipe In Tamil
ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது. சுவரொட்டியில் அமினோ அமிலங்கள், மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளது. குறைந்த ஹீமோகுளோபின்னால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது இரும்பு சத்துக்காக பரிந்துரைக்க படுகிறது. மண்ணீரலில் வெறும் 50 கிராம் நமது தினசரி இரும்புசத்து தேவையில் 100 சதவீதம் செய்கிறது. ஆட்டு மண்ணீரலில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்{ இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகப்படுத்துகிறது} மேலும் இரத்த சோகை வரால் தடுக்கிறது.இவ்வளவு நன்மையுள்ள ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
Yield: 6 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- மட்டன் சுவரொட்டி தேவையான அளவு
- மஞ்சள் தூள் கொஞ்சம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 10 சின்ன வெங்காயம் நறுக்கியது
- 2 பச்சை மிளகாய் நறுக்கியது
- கருவேப்பிலை கொஞ்சம்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 தக்காளி நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
- 1 டீஸ்பூன் மிளகாய் பொடி
- 1 டீஸ்பூன் தனியா பொடி
- ¼ டீஸ்பூன் கரம் மசாலா
- 2 ஸ்பூன் தேங்காய் நறுக்கியது
- 1 டீஸ்பூன் சோம்பு பொடி
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
செய்முறை
- முதலில் சுவரொட்டியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி கழுவி எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கொஞ்சம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பிறகு அதில் நறுக்கிய தக்காளி, ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள சுவரொட்டியை சேர்த்து கலந்து வெகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
- தண்ணீர் சுண்டியதும் நறுக்கிய தேங்காய், சோம்பு பொடி, மிளகு பொடி, சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும்.