உடலுக்கு வலு சேர்க்கும் அருமையான சர்க்கரைவள்ளி கிழங்கு அடை தோசை, மிகவும் சுவையாக இருக்கும்!!!

- Advertisement -

கிழங்குகளில் பல வகைகள் உண்டு. உருளைக்கிழங்கு ,சேப்பக்கிழங்கு , மரவள்ளி கிழங்கு, வெத்தலவள்ளி கிழங்கு, என பல வகைகள் இருந்தாலும் சர்க்கரை வள்ளி கிழங்கு மிகவும் சுவையான ஒரு இயற்கையிலேயே கொஞ்சம் இனிப்பாக இருக்கக்கூடிய இந்த கிழங்கை நாம் அப்படியே வேக வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

இந்த சர்க்கரைவள்ளி கிழங்கில் பலவிதமான உணவு வகைகள் நாம் செய்யலாம். இல்லையெனில் அப்படியே இந்த சக்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து உண்ணலாம். குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்னை பலகாரங்கள் போன்றவற்றை ஸ்னாக்ஸ் ஆக கொடுப்பதற்கு பதிலாக இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்துக் கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

- Advertisement -

மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை நாம் சாப்பிட்டு வரலாம். அப்படியே சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட பிடிக்காதவர்கள் அதனை பலவிதங்களில் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சர்க்கரைவள்ளி கிழங்கை வைத்து ஒரு அடை செய்து சாப்பிட போகிறோம்.

இந்த அடை செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படாது, மிகவும் சுலபமாக எளிமையான முறையில் சீக்கிரமே செய்து முடித்து விடலாம். இந்த அடையை மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம் அல்லது காலை உணவாகவும் இந்த அடையை நாம் சாப்பிடலாம். இந்த ருசியான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
1 from 1 vote

சர்க்கரைவள்ளி கிழங்கு அடை | Sweet Pongal Adai In Tamil

சர்க்கரைவள்ளி கிழங்கில் பலவிதமான உணவு வகைகள் நாம் செய்யலாம். இல்லையெனில் அப்படியே இந்த சக்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து உண்ணலாம். குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்னை பலகாரங்கள் போன்றவற்றை ஸ்னாக்ஸ் ஆக கொடுப்பதற்கு பதிலாகஇந்த சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்துக் கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Sweet Potato Adai
Yield: 4

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 சர்க்கரைவள்ளி கிழங்கு
  • 1 கப் புழுங்கல் அரிசி
  • 1/2 கப் மைதா மாவு
  • 1/2 கப் ரவை
  • 1/2 கப் வெல்லம்
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 3 ஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் அரிசியை நான்கு மணி நேரம் நன்றாக ஊற வைத்து ஒருமிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு சர்க்கரைவள்ளி கிழங்கை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி அரிசியுடன் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லப்பாகு செய்து கொள்ளவும்.
  • அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து கலந்து விடவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு விழுது , மைதா ரவை மற்றும் வெல்ல கரைசல் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கெட்டியாக கலந்து கொள்ளவும்.
  • ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் கலந்து வைத்துள்ள மாவை அடைய தட்டி நெய் ஊற்றி இரு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சர்க்கரை வள்ளி கிழங்கு அடை ருசியான முறையில் தயார்.