சைவம்பொரிச்ச குழம்பு இப்படி செய்து சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க! அஹா என்ன ருசி என்ன ருசி!
பொரிச்சகுழம்பு புளி இல்லாமல் , மிளகு, ஜீரகம் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகை. புடலங்காய் , அவரைக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களில் செய்தால் மிக ருசியாக இருக்கும். இந்த குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள புளிப்பாக நெல்லிக்காய் தயிர் பச்சடி அல்லது புளியிட்ட கீரை செய்வது வழக்கம்