காலை உணவுக்கு ருசியான மரவள்ளி அடை இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

- Advertisement -

எப்பொழுதும் காலையிலும், இரவிலும் உணவிற்கு இட்லி, தோசை போன்றே செய்து சாப்பிடாமல் இது போன்று மரவள்ளி கிழங்கு அடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த அடை தோசை செய்து அத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அமிர்தம் போல் இருக்கும்.

-விளம்பரம்-

இந்த மரவள்ளி அடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -
trapioca
Print
No ratings yet

மரவள்ளி அடை | Tapioca Adai Recipe In Tamil

எப்பொழுதும் காலையிலும், இரவிலும் உணவிற்கு இட்லி, தோசை போன்றே செய்து சாப்பிடாமல் இது போன்று மரவள்ளி கிழங்கு அடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த அடை தோசை செய்து அத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அமிர்தம் போல் இருக்கும்.
இந்த மரவள்ளி அடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க
Prep Time10 minutes
Active Time5 minutes
2 hours
Total Time2 hours 15 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: maravalli adai, மரவள்ளி அடை
Yield: 4 people

Equipment

  • தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 மரவள்ளி கிழங்கு
  • 2 கப் இட்லி அரிசி
  • ½ கப் கடலை பருப்பு
  • ½ கப் துவரம் பருப்பு
  • ½ கப் உளுந்து
  • 5 வர மிளகாய்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • உப்பு தேவையான அளவு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 கேரட் துருவியது
  • கொத்தமல்லி தலை நறுக்கியது கொஞ்சம்

செய்முறை

  • முதலில் மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பௌலில் இட்லி அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்து, வர மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறியதும் அதனை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் துருவிய மரவள்ளி கிழங்கை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அடை மாவு பதத்தில் இருக்கவேண்டும். புளிக்க வைக்க அவசியம் இல்லை.
  • அடுத்து அந்த மாவில் தேவையான அளவு உப்பு, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் அதனை மாவில் சேர்த்து அத்துடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  • பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை அடை போல் ஊற்றி இரு புறமும் வேக விட்டு எடுக்கவும்.