- Advertisement -
சண்டே என்றாலே மட்டன், சிக்கன் உணவு அனைவரது வீட்டிலும் வாடிக்கை ஆகிவிட்டது. என்னதான் ஹோட்டலில் சென்று சாப்பிட்டாலும், அம்மா கையால் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடு இணையெ இல்லை.. அவ்வகையில் இந்த மட்டன் தால்சா பாரம்பரியமிக்க உணவு. பாய் வீட்டு பிரியாணி, நெய் சோறுக்கு இணை உணவான மட்டன் தால்சா, சுவையாக சுலபமாக செய்யலாம். இந்த குறிப்பை மட்டும் தெரிந்து கொண்டால் நீங்களும் சுலபமாக இந்த மட்டன் தால்சா நெய் சோறு அல்லது பிரியாணிக்கும் செய்து பரிமாறலாம்.
-விளம்பரம்-
பெரும்பாலான வீடுகளில், சைட் டிஷ் ஆக இந்த மட்டன் டால்சா இல்லாமல் பிரியாணி சாப்பிட மாட்டார்கள். மட்டன் சாப்பிட்டால், இதயத்தை வலிமைப்படுத்தும், எடையைக் குறைக்கும். எல்லோராலும் சுலபமாக வைக்கும் அளவுக்கு ஒரு மட்டன் குழம்பு ரெசிபி இதோ உங்களுக்காக.
- Advertisement -
மட்டன் தால்சா | Mutton Dalcha Recipe In Tamil
சண்டே என்றாலேமட்டன், சிக்கன் உணவு அனைவரது வீட்டிலும் வாடிக்கை ஆகிவிட்டது. என்னதான் ஹோட்டலில்சென்று சாப்பிட்டாலும், அம்மா கையால் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு சாப்பிட்டால்அதன் சுவைக்கு ஈடு இணையெ இல்லை.. அவ்வகையில் இந்த மட்டன் தால்சா பாரம்பரியமிக்கஉணவு. பாய் வீட்டு பிரியாணி,நெய் சோறுக்கு இணை உணவான மட்டன் தால்சா, சுவையாகசுலபமாக செய்யலாம். இந்த குறிப்பை மட்டும் தெரிந்து கொண்டால் நீங்களும் சுலபமாக இந்தமட்டன் தால்சா நெய் சோறு அல்லது பிரியாணிக்கும் செய்து பரிமாறலாம். பெரும்பாலான வீடுகளில்,சைட் டிஷ் ஆக இந்த மட்டன் டால்சா இல்லாமல் பிரியாணி சாப்பிட மாட்டார்கள்.
Yield: 4
Calories: 143kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 100 கிராம் துவரம்பருப்பு
- 50 கிராம் கடலைபருப்பு
- 1 வெள்ளை பூண்டு
- 2 தக்காளி
- 4 பச்சைமிளகாய்
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
- 1/4 கிலோ ஆட்டுக்கறி எலும்பு அதிகமாக
- 2 ஸ்பூன் .இஞ்சி பூண்டு விழுது
- 3 ஏலக்காய்
- 2 கிராம்பு
- 1/4 தேக்கரண்டி கடுகு
- 1/4 தேக்கரண்டி சீரகம்
- 2 வெங்காயம்
- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- புளி நெல்லிகாய் அளவு
- கத்திரிக்காய்
- 2 மேசைக்கரண்டி எண்ணெய்
செய்முறை
- பருப்பை நன்கு கழுவி கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து வேக வைக்கவும்.கறியை இஞ்சிபூண்டு விழுதுடன் சிறிது நீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக விடவும்.
- புளியை ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம், கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் வெங்காயம், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
- . அதில்வேக வைத்த பருப்பு, கறி, உப்பு மற்றும் காய்கறிகள் சேர்க்கவும்.
- அதில் புளிகரைசலை சேர்த்து தேவையான நீரும் சேர்த்து காய்கறிகள் வேகும் வரை கொதிக்கவிட்டு பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- பிரியாணி,நெய்சோறு. தேங்காய் சாதம் இவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
Nutrition
Serving: 700g | Calories: 143kcal | Monounsaturated Fat: 5.34g | Cholesterol: 88mg | Potassium: 223mg | Iron: 1.26mg