காலை டிபனுக்கு அட்டகாசமான சுவையில் சூப்பரான தயிர் வடை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

- Advertisement -

எல்லாருக்கும் இந்த தயிர் வடை அப்படிங்கறது ரொம்பவே பிடிக்கும். அதுவும் என்னடா நிறைய வடை சுட்டு மீந்து போயிடுச்சு அப்படின்னு கவலைப்படுறாங்களா நீங்கள் ? உங்களுக்கு தான் இந்த சூப்பரான தயிர் வடை ஆனா இதுக்கு நீங்க வடை செய்யும் போது இதே மெத்தட்ல செய்ங்கனா உங்களுக்கு தயிர் விட ரொம்பவே ருசியா கிடைக்கும். இந்த சுவையான தயிரோட ரொம்பவே ஈஸியா செய்திடலாம். வீட்டுக்கு யாராவது வராங்க வீட்ல வெறும் வடை மட்டும் தான் இருக்கு அப்படின்னு கவலைப்படுறீங்களா? கவலையே வேணாம் பத்தே நிமிஷத்துல இந்த சுவையான தயிர் வடையை நீங்க செய்திடலாம். முக்கியமா இதுக்கு புளிப்பு இல்லாத தயிர் மட்டும் இருந்துச்சுன்னா போதும்.

-விளம்பரம்-

சூப்பரான தயிர் வடை வீட்டுல சுலபமா செய்து அவங்களுக்கு கொடுத்துடலாம். இந்த சுவையான தயிர் வடை சாப்பிடும் போது ஒரு ருசி வரும் ஒரு பாருங்க. அப்படியே சாப்பிட்டா லைட்டான ஒரு புளிப்பு சுவையோட அது மேல இருக்குற பூந்தியோட பிளேவர் எல்லாமே கலந்து சாப்பிட ரொம்பவே டேஸ்டா இருக்கும் இந்த தயிர் வடை. என்னடா பங்க்ஷன்க்கு செய்த வடை எல்லாம் வீணா போயிடுச்சு நிறைய மீந்து போயிடுச்சு அப்படின்னு கவலைப்படுறீங்களா? வடைய சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களா? அவங்களுக்கு இந்த மாதிரி தயிர் வடை செய்து கொடுங்க வடை மீந்தும் போகாது மீதமா இருக்கிற வடையும் சட்டுன்னு காலியாயிடும். எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த தயிர் வடை.

- Advertisement -

ஆனால் நம்ம மீந்து போன வடையில் எப்படி 5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல்ல சுவையான தயிர் வடை செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இதுவரை சுவையான தயிர் வடைய இந்த மாதிரி நீங்க செய்து சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. இதோட டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். உங்களுக்கு தயிர் வடை சாப்பிட ரொம்ப பிடிக்குமா? அப்போ நீங்க இந்த டைப்ல வடை செஞ்சு அதுக்கு தயிர் சேர்த்து சாப்டீங்களா ரொம்பவே டேஸ்டா இருக்கும். அந்த மாதிரி ஈஸியா இந்த தயிர் வடை எப்படி ரொம்பவே சுலபமா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

தயிர் வடை | Thair Vadai in tamil

எல்லாருக்கும் இந்த தயிர் வடை அப்படிங்கறது ரொம்பவே பிடிக்கும். அதுவும் என்னடா நிறைய வடை சுட்டு மீந்து போயிடுச்சு அப்படின்னு கவலைப்படுறாங்களா நீங்கள் ? உங்களுக்கு தான் இந்த சூப்பரான தயிர் வடை ஆனா இதுக்கு நீங்க வடை செய்யும் போது இதே மெத்தட்ல செய்ங்கனா உங்களுக்கு தயிர் விட ரொம்பவே ருசியா கிடைக்கும். இந்த சுவையான தயிரோட ரொம்பவே ஈஸியா செய்திடலாம். வீட்டுக்கு யாராவது வராங்க வீட்ல வெறும் வடை மட்டும் தான் இருக்கு அப்படின்னு கவலைப்படுறீங்களா? கவலையே வேணாம் பத்தே நிமிஷத்துல இந்த சுவையான தயிர் வடையை நீங்க செய்திடலாம். முக்கியமா இதுக்கு புளிப்பு இல்லாத தயிர் மட்டும் இருந்துச்சுன்னா போதும்
Prep Time30 minutes
Active Time20 minutes
Total Time50 minutes
Course: evening, snacks, vadai
Cuisine: tamilnadu
Keyword: Aval vadai, Mor Vadai kulambu
Yield: 5 people
Calories: 223.9kcal
Cost: 100

Equipment

  • 1 மிக்ஸி
  • 2 பவுள்
  • 2 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் உளுந்து
  • 12 லிட்டர் தயிர்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 14 ஸ்பூன் பெருங்காய தூள்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • தேவையான அளவு உப்பு                             
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு

    தேவையான அளவு கேரட் துருவல்

  • தேவையான அளவு காரபூந்தி

செய்முறை

  • முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நன்றாக தண்ணீர் சேர்க்காமல் பந்து போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அரைத்து எடுத்து வைத்துள்ள மாவில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு அதில் சீரகம், இடித்து வைத்துள்ள மிளகு, உப்பு, கால் சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்து வைக்க வேண்டும்.பிறகு வடைகளை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது சிறிதாக உளுந்து மாவை எடுத்து வட்ட வடிவ வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்க வேண்டும்.
  • ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வெந்து சிவந்து வந்த பிறகு பொரித்து வைத்த வடைகளை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.வடைகள் ஆறிய பிறகு வெதுவெதுப்பான வெந்நீரில் ஆறிய வடைகளை ஒரு மூன்று நிமிடம் ஊற வைக்க வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் ஊறிய வடைகளை எடுத்து லேசாக கையால் அழுத்தி தண்ணீர் வடிந்த பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்துக்கொண்டு அதில் சீரகத்தூள், பெருங்காயத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
  • இந்த தாளிப்பை கலந்து வைத்துள்ள தயிரில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு எடுத்து வைத்துள்ள வடைகளை இந்த தயிரில் சேர்த்து நன்றாக ஊற வைத்து அதன் மேல் கேரட் துருவல், கொத்தமல்லி, காராபூந்தி சேர்த்து பரிமாறினால் சுவையான தயிர்வடை பைவ் ஸ்டார் ஹோட்டல் ஸ்டைலில் தயார்

Nutrition

Calories: 223.9kcal | Carbohydrates: 13g | Protein: 6.3g | Fat: 16.4g | Sodium: 164.4mg